தென்னிந்தியாவிலுள்ள அகதி முகாம்களிலிருந்து 500 இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்களென இலங்கை யின் பிரதி உயர் ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
சென்னையில் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராக வெள்ளியன்று கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப் பட்டதன் பின்னர் இலங்கை அரசாங்கம் மக்கள் நலன்சார் பல்வேறு நலன்புரித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இலங்கையிலுள்ள சகல மக்கள் மத்தியிலும் அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. இன, மத வேறு பாடின்றி சகல மக்களும் நடத்தப்படுகிறார்களென அவர் செய்தியார்களிடம் சுட்டிக் காட்டினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், முதலீடு செய்வதற்குரிய சாதகமான சூழ்நிலை உருவாகிவிட்டது. வெளிநாடுகள் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்ய முன் வருகின்றன. கடந்த ஜுலை மாதம் மட்டும் 45.2 வீதமான உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அகதி முகாம்களிலிருந்த 500 தமிழ்க் குடும் பங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்கள். மொத்தத்தில் மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழ்நிலை இலங்கையில் உருவாகியிருக்கிறதென அவர் கூறினார்.