இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் சீமான் கூறினார். தூத்துக்குடி வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், நம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் சிங்கள பயங்கரவாதத்திற்கு எதிரானது. ராஜபக்ஷ தமிழர்களை விடுவிக்கும் விஷயத்தில் வாக்கு தவறிவிட்டார்.
இதில் உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு 3 இலட்சம் தமிழர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதனை வலியுறுத்தி மதுரையில் கடந்த ஜுன் 18 இல் ஊர்வலம் நடத்தினோம். அதற்கு யாரும் செவி சாய்க்கவில்லை. இதனால் (29ஆம் திகதி நேற்று) தூத்துக் குடியிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறோம்.
உலக நாடுகள் உடனடியாக இலங்கையை நிர்பந்தித்து தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க செய்ய வேண்டும். அனைத்து உலக நாடுகளும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவன் தாக்கப்பட்டால் அது மட்டும் இங்கு பிரச்சனையை கிளப்புகிறது. தமிழக மீனவன் கடலில் சுடப்பட்டால் இந்திய மீனவனாக கருதப்படுவதில்லை என்றார்.
பார்த்திபன்
//இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் சீமான் கூறினார்.//
பிறகு??
சாந்தன்
பிறகு??
தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசுக்கெதிராக உலகம் பொருளாதாரத்தடை விதித்து நிறவெறி அரசை வீழ்த்தியது போலவும் ஸ்ரீலங்கா அரசு தென்னாபிரிக்காவுக்குச் சென்ற தனது கிரிக்கற் அணியை ஒட்டுமொத்தமாக வாழ்நாள் விளையாட்டுத்தடை விதித்து தண்டித்தது போலவும் நடக்கலாமல்லவா?
பார்த்திபன்
சாந்தன்
தயவு செய்து தென்னாபிரிக்காவிற்கு எதிராக பொருளாதாரத்தடை விதித்த நாடுகளின் பட்டியலை ஒருமுறை இணைப்பீர்களா?? ஏனெனில் பல நாடுகள் தென்னாபிரிக்காவின் கிரிக்கட் அணிக்குத் தடை விதித்ததையே நான் அறிந்திருந்தேன். இலங்கை விடயத்தில் பொருளாதாரத்தடை விதிக்க எந்த நாடும் முன்வராது. அத்துடன் இலங்கைக்கு பொருளாதாரத்தடை விதித்தால் அதனால் பாதிப்பிற்குள்ளாவது சிங்கள மக்கள் மடடுமல்ல தமிழ் மக்களும் தான்.
நண்பன்
பாவம் சீமான். உங்களைப் போன்றவர்களது பேச்சுகள்தான் பாவப்பட்ட தமிழர்களை முடக்கியுள்ளது. அடித்து பெறும் காலமல்ல. அணைத்து பெறும் காலம். அவதானம். அவதானம். பேச்சில் அப்பாவிகள் உயிர் வாழ அவதானமாக பேசுங்கள்.
palli
சாந்தன் தவறை சரி செய்யவும் அது தென் ஆபிரிக்காவல்ல
சோமாலியா, எகெப்த்தியா என நினைக்கிறேன்;
கிருபா
இலங்கை விடயத்தில் பொருளாதாரத்தடை விதிக்க எந்த நாடும் முன்வராது என்பது இரண்டாம் கட்ட கவலை. சீமான் கேட்பதால் முன்வருவார்களா என்பதே முக்கிய கவலை.
இருந்தாலும், ஈழ தமிழர் பிரச்சினையில் சீமானுக்குள்ள கரிசனைக்கு மரியாதை தர வேண்டும். காரணம், விரல் விட்டு ஒரிருவர் மட்டுமே இப்ப எங்கள் குமுறல்களுக்கு குரல் தருகிறார்கள்.
கிருபா
சாந்தன்
தென்னாபிரிக்காவுக்கு எதிராக பொருளாதார, ராணுவ தடைகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 25-30 நாடுகள் வெவ்வேறு நிலைகளில் விதித்திருந்தன.
இதில அமெரிக்க தடையே தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசின் முதுகை உடைத்தது எனலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பொருளாதார வல்லரசாக வள்ர்ந்த தென்னாபிரிக்கா 1980களில் தளர்ந்ததற்கு பொருளாதார நிலக்கு சென்றதற்கு இத்தடையே காரனம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். இதனை நேர்கொள்ளுமுகமாக தென்னாபிரிக்கா ஸ்ரீலங்கா போன்ற மனித உரிமை மீறல் நாடுகளுக்க்கு ஆயுத ஏற்றுமதி செய்து சமாளிக்க முனைந்தனர்.
1986 இல் அமெரிக்கா தென்னாபிரிக்காவில் இருந்து இறக்குமதிகளுக்கு தடை விதித்தது. இது அன்றைய ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் காலத்தில் அவரின் நொண்டிச்சாட்டு வீட்டோவையும் மீறி செனற்/காங்கிரசினால் செய்யப்பட்டது. அதனால் தென்னாபிரிக்க ஏற்றுமதி வர்த்தகம் 50% வீழ்ச்சிகண்டது. தென் ஆபிரிக்காவின் புகழ் பெற்ர ”வைன்” உற்பத்தி சின்னாபின்னமாகியதற்கு இத்தடையும் ஒரு காரணம். இந்த வைன் உற்பத்தியை மீண்டும் தரமாக்க 10 வருடங்கள் வரை தேவைப்படும் என்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் (இங்கிலாந்து , பிரான்ஸ், இத்தாலி என நினைக்கிறேன்) 1987 இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக தடைகளை விதித்தன.
இதில் முக்கியமானது 80களின் நடுப்பகுதியில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றன தமது உதவிகளையும் குறைக்க ஆரம்பித்தது மட்டுமல்லாமல் ஏலவே கொடுத்த கடனையும் கட்ட நிர்ப்பந்தித்தன.அத்துடன் நியூயோர்க் நகர முதலீட்டு வங்கிகள் தென் ஆபிரிக்காவுடனான நிதித்தொடர்புகளை நிறுத்தியது மட்டுமல்லாது ஓரிரு வாரங்களில் ஏறத்தாழ 1.5 பில்லியன் டொலர்களை மீழப் பெற்றனர். ( 80களில் 1.5 பில்லியன் என்பது மிகப்பெரிய தொகையாகும். உலகின் மிகப்பெரிய நிறுவனமான ஜெனெரல் மோட்டார் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 3 பில்லியன்களாக இருந்தது)
இவ்வகையான நடவடிக்கைகளை இங்கிலாந்து வங்கிகளும் செய்தன. அரசியல் காரணங்களுக்காகவே செய்யப்பட்ட இந்நடவடிக்கைகள் தென்னாபிரிக்காவின் கடன் கொடுப்பனவு நடவடிக்கைகளில் ஒரு சிக்கல் நிலையை தோற்றுவித்தன. 1980களின் இறுதிப்பகுதியில் அமெரிகாவில் மட்டும் 25 மாநிலங்கள், 20வரையான நகரசபைகள், 75 நகரங்கள் இவ்வகையான நடவடிக்கைகளை தன்னிச்சையாக எடுத்தன (அமெரிக்கா ஒரு சமஷ்டி ஆட்சி ஆதலால் மாநிலங்கள் மத்திய அரசின் விதிகளை மீறி சிலவிடயங்கள் செய்யமுடியும்.உண்மையாகவே மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி ).
உலகின் 3/4 பங்கு பணச்சுழற்சியை கொண்ட நியூயோர்க் நகரும் இதிலொன்று. இக்காலகட்டத்தில் நியூயோர்க் நகரமே ஒரு பொருளாதார சிக்கலில் மாட்டியிருந்தும் கூட தென்னாபிரிக்க நிறவெறி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம் என நியூ யோர்க் முடிவெடுத்திருந்தது. இக்காலகட்டத்தில் இடைக்கால, சிறுகடனுதவிகளைக்கூட அமெரிக்கா நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னாபிரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த வியாபாரநிறுவனமும் இம்மாநில அரசுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது என தடையும் விதித்தனர். இதனால் சுவிஸ் முதலீட்டு வங்கிகள் தென்னாபிரிக்க கடையை மூடினர்! இறுதியில் தாம் பெற்ற கடன் தொகையில் 15 பில்லியனை மீளச் செலுத்த முடியாமல் தென்னாபிரிக்கா கெஞ்சவேண்டி வந்தது.
ஜமேக்காவின் தலைவர் “பிரிற்றோரியா மனித உரிமை அடிப்படையான விவாதங்களை ஏற்க முடியாவிட்டால் குரூகர் ராண்ட் ஐ அடிப்படையாக வைத்து செய்யப்படும் வாதங்களை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்” என இதனை மிக அழகாக சொன்னார். ( “If Pretoria will not listen to arguments based on rights, it will listen to arguments based on rands.” குரூகர் ராண்ட் -தென்னாபிரிக்க பண அலகு, பிரிற்றோரியா – தென்னாபிரிக்க தலைநகர்)
அத்துடன் ஃபோட், ஜெனரல் மோட்டார், ஐ.பி.எம் கம்பனிகள்கூட தமது தொழிற்சாலைகளை மூடவேண்டியிருந்தது.
”நாம் கறுப்பின மக்கள் சொல்லொணாத்துயரத்தை அனுபவிக்கிறோம், இத்துயரங்களில் இருந்து விடுபட மேலதிக துயரங்களை பொருளாதாரத்தடை வடிவில் தாங்கிக்கொள்ளவும் த்யாராயிருக்கிறோம்” என சொன்னார் சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க பேராயர் வண.டெஸ்மண்ட் ரூ ரூ!
இப்பொருளாதாரத்தடையை செய்த நாடுகள் ஏறத்தாழ 25 இருக்கலாம். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, சுவீடன், அயர்லாந்து என்பன அடக்கம். ஜேர்மனி கொஞ்சம் நழுவல் போக்கை கடைப்பிடித்து கடைசியில் தடைக்கு ஒத்டுவந்தது என நினைக்கிறேன். ஆபிரிக்க நாடுகளின் பட்டியல் என்னிடம் தற்போதில்லை. ஆனால் ஸம்பியா தனது பொதுநலவாய நாட்டு அங்கத்துவத்தை தூக்கி எறியப்போவதாக இங்கிலாந்தை பயமுறுத்தியும் இருந்தது.
நெல்சன் மண்டெலா பதவியேற்ற பின்னர் உடனடியாக செய்த காரியங்களில் ஒன்று ஸ்ரீலங்காவுடனான ஆயுத ஒப்பந்தத்தை தூக்கி எறிந்தது!
”….அத்துடன் இலங்கைக்கு பொருளாதாரத்தடை விதித்தால் அதனால் பாதிப்பிற்குள்ளாவது சிங்கள மக்கள் மடடுமல்ல தமிழ் மக்களும் தான்….”
இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!
ஃபோட் கார், ஜெனெரல் மோட்டோர்ஸ், ஐ.பி.எம் போன்ற கம்பனிகலை மூடாமல் இருக்க ரொனால்ட் ரேகனும் இக்கம்பனிகளின் முகாமைத்துவமும் கூறிய நொண்டிச்சாட்டு என்னதெரியுமா?
“ இவ்வகையான பொருளாதார தடைகளினால் பாதிக்கப்படப்போவது வெள்ளையர்கள் மட்டுமல்ல, கறுப்பர்களும் தான்” என்பதே!!
Ramesh
வைகோ போன்ற தமிழ் நாட்டு அரசியல் வாதிகளினதும், சில சினிமக்கரர்களினதும் தொலை நோக்கு இல்லாத வீராப்பு பேச்சு நீண்ட காலத்தில் தமிழ் நாட்டுக்கே ஆபத்து.
பார்த்திபன்
//அன்றைய ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் காலத்தில் அவரின் நொண்டிச்சாட்டு வீட்டோவையும் மீறி செனற்/காங்கிரசினால் செய்யப்பட்டது.-சாந்தன் //
சாந்தன்
தங்கள் விளக்ககங்களுக்கு நன்றிகள். இவை உண்மையாகவே எனக்கு புதிய தகவல்களாகவே இருகக்கின்றன. தங்கள் தகவல்களில் எந்தளவில் உண்மைகள் உள்ளன என்பதை, மற்றைய தேசம்நெற் நண்பர்களும் உறுதிப்படுத்தவார்கள் என நம்புகின்றேன். இதில் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரம் என்பது ஐ.நா சபையில் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். அதற்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தையும் ஏன் தாங்கள் தொடர்புபடுத்தினீர்கள் என்பது கூட வினோதமாக உள்ளது.
பார்த்திபன்
//விரல் விட்டு ஒரிருவர் மட்டுமே இப்ப எங்கள் குமுறல்களுக்கு குரல் தருகிறார்கள்.- கிருபா //
சீமான் உண்மையாகவே இலங்கைத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க நினைப்பவராகவிருந்தால் நிச்சயமாக அவரைப் பாராட்டலாம். ஆனால் அவரைப் போன்ற சிலர் விடுதலைப்புலிகளிடம் வாங்கும் பணத்திற்காகவே குரல் கோடுக்கின்றார்கள். அவர்கள் மக்களுக்காக குரல் கொடுப்பதைவிட புலிகளுக்காகவே குரல் கொடுப்பது அதிகம். சீமான் போன்றவரர்களின் வண்டவாளங்களை புட்டு வைத்ததே எனது இந்திய நண்பரொருவர் தான். சீமான் மிகுந்த பின்தங்கிய குடுமம்பமொன்றிலிருந்தே வந்தவர். இவர் இயக்கிய மற்றும் நடித்த படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் இவர் வைத்திருக்கும் வாகனம் மிக உயர்ந்தரக ஜீப். இதன் பெறுமதியே பல இலட்சம் இந்திய ரூபாக்கள். அத்துடன் இவரது வீடும் மேற்தட்டு மக்கள் வாழும் வீடுகளுக்கிணையான சொந்த வீடு. இதுபோலவே நெடுமாறன் விடயமும். நெடுமாறனும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரே. இவர் MPயும் இல்லை MLAயும் இல்லை. அதாவது வருமானமில்லாமல் கட்சி வைத்திருப்பவர். ஆனால் இவரது பிள்ளைளகள் எல்லோரும் ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்று அங்கேயே வாழ்கின்றார்களாம். இவற்றிற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது?? இவர்களின் ஏமாற்று வேலைகள் பல தமிழக மக்களுக்குத் தெரிந்ததால்த் தான், இவர்களின் நடவடிக்கைகள் அந்த மக்களிடம் எடுபடுவதில்லை.
ஏமாறுவதற்கு இளிச்சவாய்த் தமிழர்கள் இருக்கும் போது, இப்படி ஏமாற்றிப் பிழைப்பதற்கும் ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை உத்தமர்களாக நினைத்துப் போற்றவும் ஆட்களிருப்பார்கள்.
சாந்தன்
‘…இதில் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரம் என்பது ஐ.நா சபையில் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். அதற்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தையும் ஏன் தாங்கள் தொடர்புபடுத்தினீர்கள் என்பது கூட வினோதமாக உள்ளது…’
வீட்டோ என்பது ஐ.நா சபை மட்டுமே சம்பந்தப்படும் விடயம் என நீங்கள் நினைப்பதில் எனக்கு ஒன்றும் வினோதமில்லை.
வீட்டோ என்பது ‘(நான்) தடுக்கிறேன்’ என பொருள்படும். இது ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் இது முழுமையான தடையாக இருக்கும். ஐ.நா பாடுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து நிரந்தர அங்கத்தினர்களுக்கு இது உண்டு.
ஆனால் அமெரிக்காவில் ஜனாதிபதிக்கு இந்த அதிகாரம் உண்டு. அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்தில்லாமல் எந்தச் சட்டமும் பொதுவாக நடைமுறக்கு வராது.இவர் நாட்டிற்கு உதவாத சட்டங்களையோ சரத்துக்களையோ வீட்டோ செய்வார். ஜநாதிபதி சட்டமூலத்தை 10 நாட்களுக்குள் கையெழுத்திட்டு சட்டமாக்கலாம் அல்லது தனது வீட்டோவை உபயோகித்து கையெழுத்திடாமல் காங்கிரசுக்கு திருப்பி அனுப்பலாம். அவ்வாறு திருப்பி அனுப்பும் பட்சத்தில் ஏன் கையெழுத்திடவில்லை என விளக்கமளிக்கவேண்டும். விளக்கமளிக்காமலும் கையெழுத்திடாமலும் முரண்டு பிடித்தால் இருந்தால் அச்சட்டமூலம் நாட்டின் சட்டமாக அவரின் கையெழுத்திலாமலே சட்டமாக மாறும். ஜநாதிபதி வீட்டோ செய்த சட்டம் மீண்டும் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் காங்கிரசிலும் செனற்றிலும் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் ஜநாதிபதியின் கையெழுத்தில்லாமலே சட்டமாக மாறும்!
உதாரணமாக மேலே சொன்ன தென்னாபிரிக்க விவகாரம். அமெரிக்க காங்கிரசும் செனற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக கொண்டுவந்த தடைச்சட்டத்தை “ இவ்வகையான பொருளாதார தடைகளினால் பாதிக்கப்படப்போவது வெள்ளையர்கள் மட்டுமல்ல, கறுப்பர்களும் தான்” என்னும் நொண்டிச்சாட்டை கூறி வீட்டோ பண்ணினார். அதாவது நிராகரித்து விளக்கமளித்து சட்டமூலத்தை செயலற்றதாக்க முயன்றார். ஆனால் இதை மீண்டும் கையெலெடுத்த காங்கிரஸ்/செனற் சபை 2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றி ரேகனின் வீட்டோவை மீறி அவரின் முகத்தில் கரிபூசினர்!
உண்மையான சமஷ்டி ஆட்சிக்க்கு உதாரணம்!
வெறும் அடுக்கு மொழி வசன இலக்சன் கால வோட்டு கேட்கும் சமஷ்டி அல்ல.
பார்த்திபன்
சாந்தன்
மீண்டும் நன்றிகள் தங்கள் விளக்கத்ததிற்கு. ஆனால் இங்கு கூட நீங்கள் குறிப்பிடும் விளக்கத்தை வைத்துப் பார்க்கையில்; அமெரிக்க ஜனாதிபதியின் வீட்டோ என்பதே பவர் இல்லாத போது, அதை எப்படி வீட்டோ பவர் என்று சொல்ல முடியும்?? ஏனெனில் இறுதியில் தீர்மானத்தை முடிவெடுப்பது காங்கிரஸ்/செனற் சபை எனும் போது.
நண்பன்
பார்த்திபன் பார்வையில் நியாயம் இருக்கிறது. ஒரு விடயத்தை எதிர்த்து வீட்டோ பவரை பாவிதத்தால் அதை வேறு எவராலும் முன்னெடுக்கவே முடியாது. இதுவே நடைமுறை.
அமெரிக்க ஜனாதிபதியின் வீட்டோ பவரை காங்கிரஸ்/செனற் சபையால் இல்லாமல் செய்வதெனன்பது வீட்டோ என்பதான கருத்தாகாது. அது வீட்டோவல்ல.
chandran.raja
பார்த்திபனுக்கு நன்றி. நெடுமாறன் சீமான் போன்றவர்களின் பின்புலங்களை வெளிகொண்டு வந்தற்காக. பழைமைக்கு உதாரணம் இவர்கள் தான். தமிழனுக்கு நாடு இல்லை. தமிழ் எங்கள் மூச்சு என்பவர்களும் இவர்கள் தான். மகிந்தா ராஜயபக்சா அரசு கொடுமையானது. தமிழ்மக்களை அழிப்பது தான் ஒரே நோக்கமாக கொண்டுள்ளார் என்பதே இவர்களது முதல் வாக்கியம். இது புலம்பெயர் தமிழர்களால் வளர்தெடுக்கப்பட்ட புலியின் பினாமிகள் என்பதைத்தவிர தற்போதைக்கு வேறு எதைக்கூறமுடியும்.
சாந்தன்
நண்பன், பார்த்திபன்,
இங்கே விவாதம் அமெரிக்காவில் வீட்டோ உண்டா இல்லையா அல்லது அதனை எப்படி ‘பவர்’ என அழைகலாம் என்பதல்ல.
எனினும் நீங்கள் கேட்டபடி அமெரிக்காவில் வீட்டொ பவர் உண்டென சொன்னேன். நீங்களோ ஆங்கிலத்தில் பிழைபிடிக்கிறீர்கள். இங்கு விவாதம் தென் ஆபிரிக்க பொருளாதாரத்தடை போன்ற ஒன்று ஸ்ரீலங்காவுக்கு எதிராக கொண்டுவர முடியாதா என்பதே?
எனினும் நீங்கள் கேட்ட ‘பவர்’ பற்றி சொல்கிறேன். இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகளினால் செய்யப்பட்ட வீட்டோக்களின் எண்னிக்கை 2562 இவற்றில் செனற்/காங்கிரசினால் 2/3 பெரும்பான்மையினால் மீறப்பட்ட வீட்டோக்களின் எண்னிக்கை 110 ! வெறும் 4.29 %.. 95.71 % ஐ மீற முடியவில்லை. இது ‘பவர்’ இல்லையா?
அமெரிக்க அரசியலமைப்பு முறையை விவாதிக்க தனியான ஒரு தலைப்பில் விவாதிப்போமே. அமெரிக்க முறை பற்றி நான் எழுத நேர்ந்தது பார்த்திபன் லிஸ்ற் கேட்டபடியால் தான்.
‘…பார்த்திபன் பார்வையில் நியாயம் இருக்கிறது. ஒரு விடயத்தை எதிர்த்து வீட்டோ பவரை பாவிதத்தால் அதை வேறு எவராலும் முன்னெடுக்கவே முடியாது. இதுவே நடைமுறை…’
உங்களிக்குத் தெரிந்த ஐ.நாவில் மட்டுமே இது முழுமையான வீட்டோ. ஆனால் உலக நடைமுறை அல்ல. வீட்டொ என்பது ஒரு லத்தீன் சொல். மீண்டும் சொல்கிறேன் வீட்டொ நடைமுறையில் பகுதியான வீட்டொவும் உண்டு. அதை அமெரிகாவில் லைன் ஐட்டம் (Line Item) வீட்டோ என்பர். அதைப்பற்ரிப் பின்னர்.
‘…ஏனெனில் இறுதியில் தீர்மானத்தை முடிவெடுப்பது காங்கிரஸ்/செனற் சபை எனும் போது….’
அமெரிக்கா மூன்று கிளைகளால் ஆளப்படுகிறது. அவை நிறைவேற்று அதிகார கிளை (வெள்ளைமாளிகை) சட்டவாக்கல் கிளை (காங்கிரஸ்/செனற்) நீதிபரிபாலன அலகு (உச்ச நீதிமன்று)
இதில் யாரும் தனித்து ‘ஆட’ முடியாது. மூன்று கிளைகளுக்கும் சம அலவில் அதிகாரமுண்டு.அதாவது உண்மையான சமஷ்டி.
நான் மீண்டும் சொல்வதெல்லாம் இங்கே விவாதம் வீட்டொ என்கின்ற சொல் பற்றியதல்ல. உங்களுக்குத் தெரிந்த வீட்டோ ஐ.நா வீட்டொ என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது. பெளத்த சமயம் என்றால் ஸ்ரீலங்கா பெளத்தம் என்றுதான் நீங்கள் விவாதிப்பீர்கள் எனின் நான் என்ன சொல்ல முடியும்?
பார்த்திபன் வ்லையில் அமெரிக்க அரசியலமைப்பு பற்றி நிறைய உண்டு. மேலும் அவ்வமைப்பு சரியா, பிழையா, வீட்டோ சரியா, காங்கிரசுக்கு போர்ப் பிரகடனம் செய்யும் அதிகாரம் உண்டா, இல்லையா….இவ்வாறு அரசியலமைப்பு விவாதங்கள் நிறைய உண்டு. தேடிப்படியுங்கள்.
எனினும் கேள்விகள் இருப்பின் கேளுங்கள். பதிலளிப்பேன்.
பார்த்திபன்
// எனினும் நீங்கள் கேட்ட ‘பவர்’ பற்றி சொல்கிறேன். இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகளினால் செய்யப்பட்ட வீட்டோக்களின் எண்னிக்கை 2562 இவற்றில் செனற்/காங்கிரசினால் 2/3 பெரும்பான்மையினால் மீறப்பட்ட வீட்டோக்களின் எண்னிக்கை 110 ! வெறும் 4.29 %.. 95.71 % ஐ மீற முடியவில்லை. இது ‘பவர்’ இல்லையா? – சாந்தன் //
// ஜனாதிபதி விளக்கமளிக்காமலும் கையெழுத்திடாமலும் முரண்டு பிடித்தால் இருந்தால் அச்சட்டமூலம் நாட்டின் சட்டமாக அவரின் கையெழுத்திலாமலே சட்டமாக மாறும். ஜநாதிபதி வீட்டோ செய்த சட்டம் மீண்டும் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் காங்கிரசிலும் செனற்றிலும் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் ஜநாதிபதியின் கையெழுத்தில்லாமலே சட்டமாக மாறும்!- ஏற்கனவே சாந்தனின் விளக்கம் //
நீங்கள் மீண்டும் தவறான விளக்கத்தையே தருகின்றீர்கள். இங்கு கூட தாங்கள் ஏற்கனவே தந்த விளக்கத்தின் பிரகாரம்; ஜனாதிபதி ஏன் கையெழுத்து இடவில்லை என்பதற்காக அவர் கொடுத்த விளக்கத்தை, காங்கிரஸ்/செனற் சபையில் 2/3 பங்கினர் ஏற்றுக் கொண்டு ஆதரவாக வாக்களித்தாலேயே சட்டமாகின்றது. இங்கே கூட காங்கிரஸ்/செனற் சபையின் முடிவே இறுதி முடிவை தீர்மானிக்கிறது. இதில் எங்கே ஜனாதிபதியின் பவர் உள்ளது. இங்கே நீங்கள் தந்த தவறான வீட்டோ பற்றிய கருத்தையே தெளிவாக்க விரும்பினேன் அன்றி வீட்டோ பற்றிய வாதமாக இதைத் தொடரவல்ல.
சாந்தன்
பார்த்திபன்,
‘…ஜனாதிபதி ஏன் கையெழுத்து இடவில்லை என்பதற்காக அவர் கொடுத்த விளக்கத்தை, காங்கிரஸ்/செனற் சபையில் 2/3 பங்கினர் ஏற்றுக் கொண்டு ஆதரவாக வாக்களித்தாலேயே சட்டமாகின்றது. …’
இல்லை இல்லை….ஜனாதிபதியின் விளக்கத்தை எற்றுக்கொண்டால் செனற்/காங்கிரஸ் சட்டத்தை அவ்விளக்கத்துக்கு அமைவாக மாற்றிவே வாக்களிக்க வேண்டும். மாற்றாமல் வாக்களிக்க முடியாது. விளக்கத்தினை நிராகரித்தே வாக்களிப்பு நடாத முடியும்.அதுவெ தென்னபிரிக்க விடயத்தில் நடந்தது. அதாவது “ இவ்வகையான பொருளாதார தடைகளினால் பாதிக்கப்படப்போவது வெள்ளையர்கள் மட்டுமல்ல, கறுப்பர்களும் தான்” என்னும் நொண்டிச்சாட்டை கூறி வீட்டோ பண்ணியதை மீறி வாக்களித்து பொருளாதார தடை கொண்டுவந்தனர். இது நான் குறிப்பிட்ட 110 தடவைகளில் (4.6% இல் ஒன்று)
எல்லாவற்ருக்கும் மேலாக வீட்டோ என்பதை சட்டவாக்கலுக்கு பயன்படுத்த முடியாது. சட்டவாக்கல் முயற்சியை முறியடிக்கவே பயன் படுத்த முடியும். அதாவது வீட்டோ என்படு (சட்ட)மாற்றங்களை தடுத்து நிறுத்த பயன்படுத்தப்படுவதல்லாது ஏற்றுக்கொள்ல அல்ல.
(A veto gives power, possibly unlimited, only to stop changes, but not to adopt them.)
பார்த்திபன்
சாந்தன்
அதாவது ஜனாதிபதியின் விளக்கத்தை செனற்/காங்கிரஸ் சபை எற்றுக்கொண்டால் மட்டுமே சட்டவாக்கம் நடைமுறைப்படுத்தப்படும். எதிர்த்தால் வாக்கெடுப்பு நடாத்தி முடிவெடுக்கப்படும். மொத்தத்தில் முடிவு செனற்/காங்கிரஸ் சபையின் கைகளிலேயே உள்ளது. செனற்/காங்கிரஸ் சபையை மீறி இதில் முடிவெடுக்கப்படவில்லையே? எனவே இதில் ஜனாதிபதிக்கு எங்கே பவர் உள்ளது? இது தான் என் கேள்வி.
சாந்தன்
“…அதாவது ஜனாதிபதியின் விளக்கத்தை செனற்/காங்கிரஸ் சபை எற்றுக்கொண்டால் மட்டுமே சட்டவாக்கம் நடைமுறைப்படுத்தப்படும்…..”
இல்லை. விளக்கத்தை ஏற்றுத் ஜனாதிபதி கோரும் திருத்தம் செய்து, மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி சட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். இல்லை ஏற்றுக்கொள்ள முடியாது என தீர்மானிக்கும் பட்சத்தில் (நொண்டிச்சாட்டுகளை)செனற்/காங்கிரஸ் சபையில் 2/3 பங்கு வாக்குகள் கிடைக்கும் பட்சத்தில் ஜனாதிபதியின் கையெழுத்து இல்லாமலே சட்டமாக்கும் அதிகாரம் காங்கிரசுக்கு உண்டு. மேலும் இச்சட்டம் அமெரிக்க அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்று நினைத்தால் சிக்கல் மீண்டும் வரும்.
பார்த்திபன் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது அமெரிக்காவில் மூன்று கிளைகளும் தாம் நினைத்தபடி ‘ஆட’ முடியாது, அது ஒரு உண்மையான சமஷ்டி அரசு என்பதையே. வெறும் கோசம் அல்ல. இங்கு மூன்று கிளைகளுக்கும் சம அதிகாரமுண்டு. காங்கிரசுக்கு 2/3 பெரும்பான்மை ஒரு ஆய்தம் எனில் ஜநாதிபதிக்கு ‘வீட்டோ’ ஒரு ஆயுதம், உச்ச நீதிமன்றுக்கு அரசியல் சாசனம் ஒரு ஆயுதம். ஸ்ரீலங்கா ஜநாதிபதி ஜே.ஆர் சொன்னது போல எனக்கு எல்லா அதிகாரமும் உண்டு ஆனை பெண்னாக்குவது தவிர என அகங்காரத்துடன் சொல்ல முடியாது. அவ்வாறானதல்ல அமெரிக்க அரசியலமைப்பும் ஆட்சி அதிகாரங்களும்.
மேலும் அமெரிக்க முதலாவது ஜனாதிபதி காலத்தில் இருந்தே (200 வருடங்களின் முன்னர்) செயற்படும் வீட்டோ வை 1945 இல வந்த ஐ.நா வீட்டொவுடன் ஒப்பிட்டு அமெரிக்க வீட்டோ சரியில்லை என வாதிடுவது எந்த ரகம் என்பது நான் சொல்லத்தேவையில்லை.
”…..எனவே இதில் ஜனாதிபதிக்கு எங்கே பவர் உள்ளது? இது தான் என் கேள்வி…”
இதுவரை 2562 வீட்டோக்கள். இவற்றில் செனற்/காங்கிரசினால் மீறப்பட்ட வீட்டோக்களின் எண்னிக்கை 110 மட்டுமே! இது ‘பவர்’ இல்லையா? ஜே.ஆர் போல இறுமாப்பாக சொல்லுமளவுக்கு ஸ்ரீலங்கா போல ‘பவர்’ இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேணும்!
மேலும் இங்கே முக்கியமானது தென்னாபிரிக்காவுக்கு எதிராக பொருளாதாரத்தடையை அமெரிக்கா வித்தித்தது என்கின்ற உண்மை. இதை 96% ஜனாதிபதி வீட்டோக்களை மீறாமல் பணிந்துசெயற்பட்டு வந்த அமெரிக்க காங்கிரஸ் மீறி தடை விதித்து தென்ன்னாபிரிக்க நிறவெறி அரசின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் பங்காற்றியது என்பதே!
சாந்தன்
அத்துடன் நீங்கள் ‘பவர்’ எங்கே எனக் கேட்கிறீர்கள். பவர் என்பது ஒப்பீட்டளவில் பார்க்க வேண்டியது. அமெரிக்காவில் வீட்டோ ’பவர்’ என்பது முழுமையான பவர் அல்ல. மாறாக மட்டுப்படுத்தப்பட்ட பவர். (Veto power in US is not ABSOLUTE but LIMITED. உண்மையான சமஷ்டி! 200 வருடங்களாக அதுவே நிலைமை )
அமெரிக்காவில் சட்டங்களை ஆக்கும் போது அல்லது பதவிகளை வழங்கும்போது முழுமையான அதிகாரம் வழங்கப்படாது. மாறாக மட்டுப்படுத்தப்பட்ட் அதிகாரமே வழங்கப்படும். காரணம் “Power corrupts and absolute power corrupts absolutely” என்பார்கள்.
அமெரிக்க அரசியலமைப்பைப் பற்றி இவ்வலவும் தற்போதைக்குப் போதும். ஸ்ரீலங்காவுக்கான பொருளாதாரத்தடை பற்றி உங்கள் கருத்துகளை முன்வையுங்களேன்! விவாதிப்போம்!