இலங்கை யர்களுக்கு விஸா வழங்கப்படும் போது யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் பிரித்தானிய விஸா கோரி விண்ணப்பிப்போர் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலும் தகவல்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என பிரபல சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பாக தகவல்களை அவர்கள் வெளியிட வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பரவலான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையைச் சேர்ந்த உயர் அரச அதிகாரிகள் சிலருக்கு அண்மைக்காலமாக பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் விஸா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாயா
ஓம் , அங்கயற்கன்னி கிருஷ்ணபிள்ளை என்பவர் வீஸா இல்லாமல் லண்டனுக்கு பிரயாணம் செய்ய பிரிட்டன் தூதுவராலயத்தின் லோர்னா குரூக்ஸ் விமான நிலையம் வந்து எப்படி அனுப்பினார்?
சாந்தன்
மாயா,
அங்கையற்கண்ணி கிருஷ்ணபிள்ளை யுத்தக் குற்றச்செயலில் ஈடுபட்டார் என உங்களுக்கு யாராவது சொன்னார்களா? …..
மாயா
சாந்தன் , நீங்கள் போலீஸ் கிளியரன்ஸ் பகுதியிலா இருக்கிறீர்கள்? எனக்கு இன்றுதான் தெரியும். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அதுதான் உங்கள் தரப்பின் அழிவுக்கு காரணம். தமக்கு ஆதரவானவர்களை ஒரு விதமாகவும், எதிர்த்தவர்களை துரோகிகளாகவும் பார்த்ததில் வந்த வினையை தூசு தட்டியாவது பாருங்கள்.
சாந்தன்
மாயா,
நீங்கள் லண்டன் ஸ்கொட்லாண்ட் பிரதி நிதி அல்லது இங்கிலாந்து வெளிநாட்டமைச்சராக வந்து எவ்வளவு காலம்?//
நான் பொலிஸ் கிளியரன்ஸ் பகுதியில் இல்லை. அதனால் எனக்கு தெரியாது. ஸ்ரீலங்கா பொலிஸ் கிளியரன்ஸ்கார்ரராயினும் கிருஷ்ணபிள்ளை அங்கயற்கண்ணி பற்றிப் ஏதாவது பிழை, அல்லது தேடப்படும் குற்ரவாளி அல்லது போர்க்குற்றவாளி என ஏதாவது சொன்னார்களா என அறிய விரும்புகிறேன்? மேலே குறிப்பிட்டுள்ள செய்திக்குறிப்பிலோ அன்றி ஸ்ரீலங்கா அரசின் குற்றச்சாட்டிலோ அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்ல்லை. மாறாக காலாவதியான விசாவுடன் அவரை அனுமதித்தது பற்றியே இருக்கிறது. மேலும் ஏற்றப்பட்ட விமானநிலயம் ஸ்ரீலங்காவில் இருக்கிறது. வரைமுறை மீறப்பட்டிருப்பின் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தடுத்து நிறுத்தியிருக்கலாமே?
ஸ்ரீலங்கா அரசினாலேயே 600 பொலிசை சுட்டதாக போர்க்குற்ற்ம் சாட்டப்பட்ட ஒருவருக்கு போலிப்பெயரிலும் பதவியிலும் ராஜீக கடவுச்சீட்டு கொடுத்து ஓடுபாதைக்கே கொண்டு சென்று பக்கவழியால் ஏற்றிய ஸ்ரீலங்கா அரசு இன்னொரு நாட்டுகாரன் தனது நாட்டுக்கு ஒருவரை அழைப்பது பற்றி குற்றம் சாட்டுவது வேடிக்கையிலும் வேடிக்கை! மாயா தேவையில்லாமல் வாதத்தை திசை திருப்ப வேண்டாம். இங்கே வாதம் இங்கிலாந்து போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்களை தனது நாட்டுகுள் அனுமதிக்கலாமா இல்லையா என்பதுதான். அனுமதிக்க முடியாது என் நீங்கள் வாதிட விரும்பின் சிலி நாட்டின் முன்னைநாள் தலைவர் அகஸ்ரினோ பினோசே பற்றி பேசுங்கள். மாறாக எந்த போர்க் குற்றமும் சாட்டப்படாதவரை ஏன் வம்புக்கிளுக்கிறீர்கள்? தமிழர் நலனில் அக்கறை என கூப்பாடுபோடுவோ தமிழன் தானே பிழைத்துப்போகட்டும் என விடுவதை விட்டு சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கவும் ஸ்ரீலங்காவுக்கு எதிரானல் நிலைப்பாடு எடுக்கும் பிரித்தானியாவை வாருவதற்கும் ஏன் இழுக்கவேண்டும்?
பார்த்திபன்
சாந்தன்
மாயா குறிப்பிட்ட விடயத்தில் என்ன தவறு. நீங்கள் தான் விடயத்தை தவறான பாதையில் திசை திருப்ப முனைகின்றீர்கள். குறிப்பிட்ட அப்பெண்மணியின் வீஸா காலாவதியானதின் பின் அவருக்கு வீஸாவை புதுப்பித்து முறைப்படி அனுப்பாமல் வீஸா இன்றியே அனுப்பி வைத்ததன் நோக்கம் என்ன?? அதுவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கே தெரியாமல் பிரித்தானிய தூதரக ஊழியரொருவரே இந்த விடயத்தை இரகசியமாக கையாள வேண்டிய அவசியமென்ன??
சென்ற வருடம் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் சிலர் பல வெளிநாட்டுப் பெண்மணிகளுக்கு பிரஜா உரிமை எப்படி வழங்கினார்கள் என்ற பாலியல் மோசடிகள் அம்பலமானதை தாங்கள் அறியவில்லையா?? பிரித்தானியா; சில சட்டதிட்டங்களை அறிவிப்பதே இப்படியான மோசடிகள் மூலம், தமது இச்சைகளைத் தீர்பதற்கோ என்ற சந்தேகம் பரவலாகவே எழுகின்றது. இந்தப் பாலியல் மோசடிகளில் பிரித்தானியப் பாராளுமன்றத்திலுள்ளவர்களும் பலதடவை மாட்டுப்பட்டதை தாங்கள் அறியவில்லையா?? குறிப்பாக மார்க்கிரட் தட்சர் பிரதமராக இருந்த போது பமிலா என்ற அழகியுடனான மந்திரிகளின் தொடர்புகள் அம்பலமானது. இப்படியான விடயங்கள் இன்றும் பிரித்தானியாவில் வகைதொகையின்றி தொடர்ந்து கொண்டேதானிருக்கின்றது. இதில் எதை வைத்து பெருமையாகப் பேசச் சொல்கின்றீர்கள்??
மாயா
//தமிழர் நலனில் அக்கறை என கூப்பாடுபோடுவோ தமிழன் தானே பிழைத்துப்போகட்டும் என விடுவதை விட்டு சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கவும் ஸ்ரீலங்காவுக்கு எதிரானல் நிலைப்பாடு எடுக்கும் பிரித்தானியாவை வாருவதற்கும் ஏன் இழுக்கவேண்டும்?- சாந்தன்//
அருமை சாந்தன் , நீங்கள் தமிழன் தவறு செய்தால் கண்டு கொள்ள வேண்டாம் என்கிறீர்கள்? மெர்வின் சில்வா செய்த தவறை எழுதியிருந்தேன். அதை கண்டு கொள்ளாத நீங்கள், இதை கண்டு கொண்டீர்கள்? உங்கள் நேர்மையான வெளிப்பாட்டை என்னனால் உணர முடிகிறது. தொடர்ந்தும் தமிழர்கள் கிரிமினல்களாக வாழ வழி காட்டுங்கள். தமிழர்கள் மாபியாக்களாக மாறட்டும். இதை விவாதித்து என்ன வரப் போகிறது?