ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் துரித வாக்களிப்பு – அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் எதிர்க்கட்சி நம்பிக்கை

ஜப்பான் பாராளுமன்றத் தேர்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. காலநிலை மோசமாக இருந்தபோதும் பெருமளவான மக்கள் வாக்களித்தனர். தொழிற்கட்சியின் ஐம்பது வருட ஆட்சி முடிவுக்கு வந்து நீண்ட காலங்களாக எதிர்க்கட்சியாகவுள்ள ஜனநாயகக் கட்சி இம்முறை ஆட்சியைப் பிடிக்குமென பெரும்பானலான மக்கள் ஆரூடம் தெரிவிக்கின்றனர்.

 அண்மைக் காலமாக ஜப்பானில் நிலையான ஆட்சி இருக்கவில்லை. ஆளும் கட்சிக்குள் உண்டான கருத்து மோதல் களால் அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். உலக நிதி நெருக்கடியால் கடுமையாக ஜப் பான் பாதிக்கப்பட்டமை, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் பாராளுமன்றத்தின் மேல் சபைக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநா யகக் கட்சி வென்றமை போன்ற காரணங்களைக் காட்டி எதிர்க்கட்சியின் வெற்றி நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னூறுக்கும் மேலான ஆசனங்களை எதிர்க்கட்சி பெறுமென எதிர்பார் க்கப்படும் நிலையில் சிலர் இதை அளவுக்க திகமான மிகைப்படுத்தல் எனவும் கூறி யுள்ளனர். ஆளும் கட்சியான தொழிலாளர் கட் சியும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்ற கடும் பிரயத்தனம் செய்கின்றன.

 நாட்டில் என்ன நடக்கப் போகிற தென்பதைக் கூற முடியாது. ஆனால் ஒரு மாற்றத்துக்காக ஜனநாயக கட்சிக்கு வாக்களித்தேன். இவ்வாறு கூறினார் ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர். வாக்குறுதிகள் அளித்தாற் போல் அனைத்தையும் ஜனநாயகக் கட்சியினர் செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.

தொழிற் கட்சியைவிட ஜனநாயகக் கட்சி சிறந்தது. என உணர்ந்து வாக்களித்ததாகக் கூறினார். மற்றொரு வாக்காளர். சிறுவர்களுக்கான முற்பணக் கொடுப்பனவு வீட்ரிமையாளர்களுக்கான கடன்கள் விவசாயிகள் ஹய்வூதியத் திட்டம் போன்ற பல நலத் திட்டங்களை ஜனநாயகக் கட்சி முன்மொழிந்துள்ளது.

நீண்ட கால (ஐம்பது வருட) ஆட்சியில் வெறுப்படைந்த மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கருத்துக் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஏற்றுமதி வரியை ஐந்து வீதத்துக்கு மேல் அதிகரிப்பதில்லை என்றும் சனத்தொகை வளர்ச்சிக் கேற்ப வீணான செலவுகளைக் குறைக்கவுள்ள தாகவும் தொழிலாளர் கட்சி விஞ்ஞாபனம் வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கட்சிகளின் வாக்குகள் அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *