மக்காவுக்கு முஸ்லிம்கள் செல்வது போன்று அதாவுல்லா கட்சியை முன்னெடுக்கின்றார் – டக்ளஸ்

epdp9999.jpgமக்காவுக்கு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் பயணம் போன்றது நாட்டின் சமாதானப் பயணம். அதனைப் போன்று அமைச்சர் அதாவுல்லா இக்கட்சியை முன்னெடுத்துச் செல்கின்றார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் நடந்த தேசிய காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-

அமைச்சர் அதாவுல்லா பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமிழ் மக்கள் மீது அக்கறையுடன் பேசிவருபவர். இலங்கைத் தீவில் அனைத்து மக்களினதும் அபிமானத்தை பெற்றவர்.  கடந்த யாழ் மாநாகர சபைத் தேர்தலில் அவர் அங்கு வந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை நாம் குறிப்பிட வேண்டும். அத்தகைய ஒருவரை நீங்கள் தலைவராகக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

வரலாறுகள் இரத்தத்தினால் எழுதப்பட்டவை. அந்த யுகம் முடிந்தது. நமக்கு இன்று ஒரு வரலாற்றுக் கடமையுள்ளது. நாம் ஒன்று திரண்டு இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

சகல இன, மத மக்களும் சரிசமமாக வாழும் சூழல் நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு சிறந்த அரசியல் தீர்வொன்று அவசியம்.கிழக்கில் இன்று சிறந்த மாகாண சபை உருவாக்கப்பட்டு ஐக்கியம் நிலவுகிறது. இங்கிருந்து தொடங்கித்தான் நாம் எமது பயணத்தை நகர்த்த வேண்டும்.

எமது எண்ணங்களை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நம்பிக்கையே வாழ்க்கை. வாழ்க்கையே நம்பிக்கையில்தான் கட்டியெழுப்பப்படுகிறது.

புலிகளின் தலைமை பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்பதை நன்கு உணர்ந்தவர் நமது ஜனாதிபதி. புலிகளின் யுகம் முடிந்து விட்டது. ஜனாதிபதியின் கரத்தை நாம் அனைவரும் பலப்படுத்த வேண்டும். சகல தலைவர்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியுள்ளதெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Ramesh
    Ramesh

    புலிகளின் தலைமை பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்பதை நன்கு உணர்ந்தவர் நமது ஜனாதிபதி. புலிகளின் யுகம் முடிந்து விட்டது.

    ஆனால் புலம்பெயர்ந்த புலிகளுக்கு இன்னும் புலித் தலைமை தானே பிரச்சனையாக உள்ளது. அவர்கள் இன்னும் தமிழ் மக்களின் பிரச்சினையை உணரவில்லைஜே.

    Reply