திஸ்ஸாநாயகத்திற்கு 20 வருட சிறைத்தண்டனை : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

tissanayaga000.jpgபயங்க ரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. வழக்கு விசாரணையையடுத்து உயர்நீதிமன்றம் அவருக்கு 20 வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறியே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட திஸ்ஸாநாயகம், விசாரணைகள் ஏதுமின்றி மொத்தம் 426 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

tissanayagam333.jpg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • கிருபா
    கிருபா

    கருணாவும் பிள்ளையானும் அவர்களின் கொலைகளும் எங்கே,,
    திஸ்ஸநாயகத்தின் பேனா மையும் ஈரமும் எங்கே.

    Reply
  • ashokbharan
    ashokbharan

    பாதுகாப்பு சம்பந்தமான சேதிகளை வெளியிடுவோரும் பத்திரிகைகள் இணையத் தளங்களும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியமானதொன்றாகும். தாம் வெளியிடுகின்ற செய்திகளால் மக்கள் பயனடைந்து கொள்வதென்பது வேறு பயங்கரவாதிகளும் அதனோடு பின்னிப் பிணைந்த உளவுத் துறையினரும் பயனடைந்து கொள்வதென்பது வேறு. இதனை மனதிலிறுத்தி தம் பணி செய்யும் எந்தவொரு பொறுப்புள்ள ஊடகவியலாளரும் எம்மால் போற்றப்பட வேண்டியவர்களே.

    மாறாக தகாதவற்றிற்காகவும் சுய நலன்களுக்காகவும் ஊடகத் துறையையும் தமது ஊடகவியலாளர் என்ற துருப்புச் சீட்டையும் பயன்படுத்தத் துணிவார்களாயின் சட்டப்படியான அவர்களின் கைதுகள் குறித்தோ அல்லது நீதிமன்றத் தண்டனைகள் குறித்தோ கவலைப்படாது அவற்றுக்கெதிராக போர்க் கொடி தூக்குவதையும் அறிக்கைகள் விடுவதையும் முற்றாக விடுத்து சாதாரண மனிதன் செய்கின்ற குற்றத்திற்கு வழங்கப்படுகின்ற தண்டனையை விடவும் பொறுப்பிலுள்ள இவர்களுக்கான தண்டனையை இரு மடங்காக கொடுக்கும் படி நீதி மன்றங்களை தாழ்மையுடன் வேண்ட யாவரும் ஒன்று படுவார்களாயின் வையகம் சிறக்கும். ஊடக சுதந்திரமும் நிலைக்கும். நாட்டின் இறையாண்மையும் சட்ட ஒழுங்குகளும் நிலை நாட்டப்படும்.

    Reply
  • Constantine
    Constantine

    A stupid rulling by a silly judge.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    CNN) — A Sri Lankan court sentenced a journalist Monday to serve 20 years in prison for articles that criticized the military, according to the Asian Human Rights Commission.

    “The AHRC is not surprised by this judgment because at the very inception of this case, the AHRC pointed out that this is purely a political case,” the commission said in a statement.

    J.S. Tissainayagam, the editor of a monthly magazine, was arrested in March 2008 for printing articles critical of the Sri Lankan military’s treatment of civilians during the country’s war on the Tamil Tiger rebel group, according to several human rights groups.

    The Tamil journalist was held without charge for several months, prompting outrage from human rights and press freedom organizations. He was later charged under the country’s controversial Prevention of Terrorism Act.

    His case has drawn international attention to the plight of press freedom in Sri Lanka, which ended its decades-long war against the Tamil rebels earlier this year.

    The country’s military has been accused of numerous atrocities against civilians during the final months of the 26-year conflict.

    Sri Lanka has denied the accusations, and routinely rejects calls by human rights groups for independent investigations into its campaign against the Tigers.

    U.S. President Barack Obama mentioned Tissainayagam in his May 1 statement on World Press Freedom Day:

    “In every corner of the globe, there are journalists in jail or being actively harassed: from Azerbaijan to Zimbabwe, Burma to Uzbekistan, Cuba to Eritrea. Emblematic examples of this distressing reality are figures like J.S. Tissainayagam in Sri Lanka, or Shi Tao and Hu Jia in China.”

    The Asian Human Rights Commission condemned Monday’s sentence as “the most glaring proof of the absence of freedom of expression in Sri Lanka.”

    It called on Sri Lanka and the international community “to condemn the judgment and the sentence in Tissainayagam’s case and to call for his unconditional release.”

    http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/08/31/sri.lanka.journalist/index.html

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ’..A stupid rulling by a silly judge….’

    Sure. Sri Lanka is full of that! No surprise here. And most of the Tamils knew it. Only a hand full still hangs on to the SL for giving them Justice.

    Reply
  • Constantine
    Constantine

    Tell us the alternative.. Another arm stuggle…?? Or join with Mr Urthurakumar & Co??? or to wait until lord Pabaharan comes alive again??

    Reply
  • மாயா
    மாயா

    ஊடகவியலாளர் ஒருவருக்கு மரண தண்டனைக் குற்றவாளிக்கு கொடுப்பது போன்று கொடுத்த தண்டனை படு மட்டமானது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘…Tell us the alternative…’

    Hmmm… Audacious they call it!
    I wasn’t the so called “ALTERNATIVE VOICE” guy. So please don’t ask me. Don’t you think people who preached us to believe alternative voice, democracy, court of law and that kind of grand ideas should have the MORAL OBLIGATION to explain it to us, the laymen, rather than making easy statements like ‘stupid ruling ‘ or ‘silly judge’.

    Reply
  • palli
    palli

    நான் கடவுளை நம்புபவனல்ல; ஆனால் இந்த நண்பருக்காக கடவுளை வேண்டுகிறேன் அவர் என்னும் ஒரு 13 வருடம் உயிருடன் இருக்க வழிசெய் என, காரணம் அவர் வெளியில் வந்து தனது அனுபவத்தை இந்த பாழாய்போன ஊடக(பொய்யான) துறைக்கு எழுதவேண்டும் ,அவருக்கு ஆதரவாய் இந்த பல்லியும் நாலு வார்த்தை எழுத வேண்டும், ஆண்டவா வழி செய்வாயா?

    Reply