சந்திரா யன்-2 திட்டத்துக்கு பின் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் தொடர்பாக பல விஞ்ஞான அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் கொடுக்கும் திட்டங்களை அடிப்படையாக வைத்து செவ்வாய் கிரக ராக்கெட்டை எப்படி உருவாக்குவது என்பதை முடிவு செய்ய முடியும்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது 2013 முதல் 2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். விரைவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து சந்திரயான்-1 திட்டம் குறித்து மாதவன் நாயர் விவாதிக்கவுள்ளாராம்.
செயலிழந்து போய் விட்ட 514 கிலோ எடை கொண்ட சந்திரயான்-1 விண்கலம் இன்னும் ஓராண்டுக்கு நிலவின் வட்டப் பாதையில் இருக்கும். அதன் பின்னர் அது படிப்படியாக நிலவின் தளத்தில் மோதி விழுந்து விடும்.
இதற்கிடையே, எந்தவிதமான நிலவுப் பயணங்களும் ஒரு ஆண்டு வரை நீடித்ததில்லையாம். அதிகபட்சம் 6 அல்லது 7 மாதங்கள் வரைதான் நீடித்துள்ளன. ஆனால் சந்திரயான்-1 விண்கலம் கிட்டத்தட்ட 10 மாதங்கள் நிலவைச் சுற்றி வந்தது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. நிலவின் சுற்றுச்சூழல், சூரிய கதிர்வீச்சு, விண்வெளியில் காணப்படும் பல்வேறு சூழல்கள் ஆகியவற்றைத் தாக்குப்பிடித்து சந்திரயான்-1 இத்தனை காலம் இருந்ததே மிகப் பெரிய சாதனை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.