இலங்கையின் யுத்தக் குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அவசியம் என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளமை தொடர்பில் நோர்வே அரசாங்கத்திடம் சட்டரீதியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு செயலாளர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமைந்துள்ள நோர்வே தூதரகம் ஊடாக வார இறுதியில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணை வேண்டும் என்று கோரியுள்ளமை துரதிஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சொல்ஹெய்ம்மின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் வெளியுறவுச் செயலாளர் பாலித கோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சொல்ஹெய்ம் தெரிவித்துள்ள இக்கருத்து தொடர்பாக வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
sekaran
நோர்வே நாடாளுமன்ற தேர்தல் செப்.14ல் நடக்கப்போகிறது. சோல்ஹெய்ம் அய்யாவும் போட்டியிடுகிறார். கிட்டத்தட்ட ஈழத்தமிழர்கள் வாக்குகள் 6000-10000 வரை தேறும். ஆகவே..ஆகவே..ஆகவே.