இந்த ஆண்டில் குடியுரிமை ஆவணங்கள் இல்லாமல் பிரிட்டன் வந்தவர்களில் 470 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜிம்பாப்வே, சூடான், இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த ஏழை குடும்பங்கள் பிரிட்டனில் தஞ்சம் அடைகின்றன. இதில் பெரும்பாலானோர் முறையான குடியுரிமை ஆவணங்கள் வைத்திருப்பதில்லை. இவர்கள் குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்படுகின்றனர்.
கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டில் குடியுரிமை இல்லாமல் பிரிட்டன் வந்தவர்களில் 470 சிறுவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் லண்டன் விமானம் நிலையம் வந்து இறங்கியதும் கைது செய்யப்பட்டனர்.
இதில் பெரும்பாலான சிறுவர்கள் 5 வயதுக்கும் குறைவானவர்கள். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் 28 நாட்களுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதத்தில் 225 பேர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். 100 பேர் பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். லண்டனில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.