காஸ் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. “ஷெல் காஸ்’ 103 ரூபாவினாலும் “லாப் காஸ்’ 69 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனடிப்படையில், ஷெல் காஸ் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1550 ரூபா என்றும் இந்த அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும் ஷெல் காஸ் நிறுவனத்தின் தலைவர் வேஹகபிட்டிய தெரிவித்துள்ளõர்.
இதேவேளை, லாப் காஸ் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1476 ரூபா என அந்நிறுவனத்தின் நிதிப்பணிப்பாளர் ரிமோய்ன் சல்டின் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி உலக சந்தையில் ஏற்படுகின்ற விலை மாற்றங்களுக்கு ஏற்ப இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை உள்ளூரின் காஸ் விலைகளை நிர்ணயம் செய்ய முடியும். இவ்விலை நிர்ணயத்தின்படி சமையலுக்காக பாவிக்கப்படுகின்ற காஸின் விலைகளை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இறுதியாக கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி காஸ் சிலிண்டர்களின் விலை நிர்ணயத்தின் அடிப்படையில் ஷெல் காஸ் 53 ரூபாவினால் குறைவடைந்த அதேவேளை லாப் காஸின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.