இலங் கையின் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் பிரபல்யம் பெற்றுள்ள பாசிக்குடா கடலோரப் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளினால் தமக்கு தொழில் ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பல வருடங்களாக மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களை அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு தற்போது அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையிலேயே மீனவர்கள் இது தொடர்பான தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக கல்குடா பகுதியைச் சேர்ந்த குடும்பங்களில் 99 சதவீதமான குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா மீனவர் சங்கத் தலைவர் மயில்வாகனம் சுந்தரராஜா தெரிவித்தார்.
பார்த்திபன்
ஒரு நாட்டின் வருமானத்திற்கு சுற்றுலாத்துறையும் முக்கியமானது தான். அப்படி வரும் வருமானம் என்பதே, நாட்டிலுள்ள மக்களின் சுபீட்ச வாழ்விற்கு உதவுவதற்காகத் தான். ஆனால் ஒரு தொகுதி மக்கள் எக்கேடு கெட்டாலும் பறுவாயில்லை, சுற்றுலா வருமானம் தான் முக்கியமென ஒரு அரசு நினைத்தால் அது விபரீதமாகத் தான் போய் முடியும். மக்களை காலகாலமாக வாழ்ந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு கேட்கும் அரசு, அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு இணையாக மாற்றீடாக ஒரு இடத்தையாவது ஒதுக்கி நியாயமாக நடந்து கொள்ளவாவது முன் வந்திருக்க வேண்டும். ஆனால் அரசு ஒதுக்கிய இடமோ மிகவும் மோசமானதாக உள்ளது. இதில் அரசின் நோக்கமென்ன?? மக்களிற்காக அரசா?? அல்லது அரசிற்காக மக்களா?? இதைத் தெளிய வைக்க வேண்டிய பொறுப்பு அரசின் கைகளிலேயே உள்ளது.
மாயா
இவ்வாறான செயற்பாடுகள் சுனாமி காலத்தில் இருந்தே தொடர்கின்றன. கடலை நம்பி வாழும் மீனவர்களிடமிருந்து , அவற்றை சுற்றுலா விடுதிகளைக் கட்டுவதற்கும் , கடலை அழகுபடுத்தி சுற்றுலா பயணிகளை கவருவதற்கும் பறித்தால் , அவர்களும் அகதி முகாம்களில் முடங்கவே வேண்டி வரும்.
கல் பாறைகள் கொண்ட இடங்களுக்கு அந்த மக்களை இடம் பெயருமாறு சொல்கிறார்கள். அங்கே தமது படகுகள் சேதமாகும் ஆபத்து உள்ளது என வேறு விசனப்படுகிறார்கள் மீனவர்கள். பிள்ளையான் இதில் கவனம் எடுக்க வேண்டும். அப்படி இருக்காது என கருத்து பகிரக் கூடாது. ஆட்சி மக்களுக்காகவே தவிர தனது பதிவிக்காக அல்ல.
chandran.raja
நகரமயமாக்கல் சுற்றுலாதுறையின் மூலம் வருமானயீட்ட முயலும் அரசுகளை இலங்கையை மட்டும் தனிமைப்படுத்தி விடமுடியாது. தாய்லாந்து ஆபிரிக்கா லத்தீன் அமெரிக்க தீவுகள் கனாறியன்தீவுகள் எல்லாமே பாதிப்பு அடைந்தன அடைந்து கொண்டிருக்கின்றன கெயிட்டுதீவின் வறுமை சொல்லமுடியாதவை. சுற்றுலாவுக்கு பேர்போனசை இந்த மக்கள் வறுமையின் நிமித்தம் மண்ணில் ரொட்டி சுட்டு தின்கிறார்களென பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. நம்ப கஷ்ரமாக இருந்தால் கலையரசன் இணைத்தளத்தை பார்வையிடவும்.
முதலாளித்தின் விதிகளே இவர்களை பாதிப்புக்குள்ளாக்குகின்றன என்பதே இதன் சூத்திரம். பாதிப்புக்குயுள்ளாகுபவர்கள் தகரம் கட்போட்மட்டை குச்சிதடிகளால் வீடுகளை அமைத்துக்கொண்டு வாழும் ஏழைத்தொழிலாளரும் பிச்சைகாரர்களுமே. நீதி கேட்பதற்கும் போராடுவதற்கும் தொழில் சங்கங்கள் வலுஇழந்து விட்டன. இலங்கைக்கு மட்டும் விதிக்கப்பட்ட விதியல்ல. வரலாறு முன்நோக்கித்தான் செல்கிறது. இந்தநுற்றாண்டில் இதையும் கேட்கவேண்டும் பார்க்கவேண்டும் என்பதும் விதியாகத்தான் இருக்கிறது. மக்கள் தான் வரலாற்றின் உந்துசக்தி என்பதையும் கேட்டுவருகிறோம். எதற்கும் பொறுமை வேண்டுமென்று கூறுவார்கள். பொறுமையில்லாவிட்டால் அவசரப்பட்டு ஆயுதத்தை தூக்கிவிடுவார்கள். அது இருக்கிற ஒருமண்பாணையும் உடைத்தநிலையே ஏற்படும். ஆகவே இதை வாசித்து தற்போதைக்கு ஆறுதல் அடைவோம்.
கந்தல்லாடை கட்டிய ஏழையின் தவறுகள் கணப்பொழுதில் வெளியே தெரிகின்றன. பகட்டுடை உடுத்திய பணக்காரன் தவறுகள் பலருக்கு தெரிவதில்லை பார்வைக்கும் வருவதில்லை. பொருள் படைத்தவன் தவறுகள் இருளுக்குள் மறைகின்றன இல்லையென்றும் ஆகிகின்றன. நீதியின் வலியகரங்கள் அவ்விடம்நோக்கி நெருங்குவதில்லை.நெருங்கினால் நொருங்குகின்றன. பொருளியாளர் புரியும் தவறுகள் புதைந்து விடுவதில்லை பொசிங்கி விடுகின்றன.
சிறுதுரும்புகூட ஏழையின் இரும்புக்கோட்டையை தகர்த்துவிடுகின்றன.
சேக்ஸ்பியர்-லியர்அரசன்.