சர்வதேச பௌத்த தொல்பொருள் காட்சி நிலையம் கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் ,ஆரம்பித்து வைக்கப்பட்டதாக தலதா மாளிகையின் தியவதன நிலமே தெரிவித்துள்ளார்.
13 சர்வதேச பௌத்த நாடுகளின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த நிலையத்தில் பௌத்த மதத்தின் தோற்றம் உட்பட பௌத்த மதம் தொடர்பான அனைத்து அம்சங்களும் உள்ளடங்கியிருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.