அரசாங் கத்தின் வன்முறைகளிலிருந்து தென் மாகாண மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தென் மாகாணசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பல்வேறு வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் தென் மாகாணசபையின் தேர்தல்கள் சுதந்திரமானதும், நியாயமானதுமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் வன்முறைகள் இடம் பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். தென் மாகாணசபைத் தேர்தல்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயங்கள் பல தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.