ஜப்பானின் புதிய பிரதமராக இன்னும் இரு வாரங்களின் பின்னர் பதவியேற்கவுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவர் யுகியோ ஹடோயாமாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
அச்செயதியில் குறிப்படப்பட்டுள்ளதாவது, உங்கள் தலைமையில் ஜப்பானில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உங்கள் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளனர். நீங்கள் அடைந்துள்ள வரலாற்று வெற்றியானது ஜப்பானில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த வழியமைக்குமென நம்புகிறேன்.
ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையில் பல நூற்றாண்டு கால சரித்திர மற்றும் கலாசாரத் தொடர்புகள் உண்டு. எமது இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் ஜப்பான் வழங்கிய தாராள உதவிகளுக்கான நாம் நன்றி தெரிவிக்கிறோம்.
இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர நல்லுறவு எதிர்காலத்தில் மேலும் பலமடையும் என நம்புகிறேன் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.