பல நுற்றாண்டு காலமாக இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர கௌரவம் கடந்த இரண்டரை ஆண்டு காலப்பகுதியில் இழக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இராஜதந்திர ஒத்துழைப்பு தொடர்பில் அரசாங்கம் தெளிவற்ற வகையில் செயற்படுவதே இதற்கான காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையை ஆட்சி செய்த கடந்த கால அரசாங்கங்கள், வெளிநாடுகளுடனான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் அதிக அக்கறை கொண்டிருந்தன. எந்த நாடாக இருந்தாலும் வெளிநாட்டு உறவுகள் என்ற விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதுவே பொருளாதாரத்தில் மாத்திரமன்றி இராஜதந்திர உறவுகளிலும் கைகொடுக்க கூடியதாக இருக்கும்.
இவ்வாறான நிலைமையில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை புறக்கணித்து செயற்படுவதானது, எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளையே நாட்டுக்கு ஏற்படுத்தும் என மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
chandran.raja
திரு. அருட்செல்வன் இந்த செய்தியில் மங்களசமரவீர சிறீலங்கா சுகந்திரகட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் என் குறிப்பிட்டுள்ளீர். இது தவறான செய்தியாகிலும் இது சதாரண தவறாக இருக்கமுடியுமாஎன எண்ணுகிறீர்களா? …..
அருட்செல்வன்
chandran.raja –
சிறீலங்கா சுதந்திரகட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் என்பதில் சந்தேகமில்லை.
இச் செய்தி மங்கள சமரவீரவினால் விடுக்கப்பட்ட ஒரு செய்தியே…
mano
சுதந்திரக் கட்சியிலிருந்து மங்கள சமரவீர தலைமையில் பிரிந்து சென்ற குழுவினரின் பெயர்> சிறிலங்கா சுதந்திரக் கட்சி – மக்கள் பிரிவு என்றே அழைக்கப்படுகிறது.
சாந்தன்
செய்யுற கொலைகளை அளவோடு செய்தால் ராஜதந்திர மரியாதை கிடைக்கும் என சொல்ல வருகிறாரா? அல்லது ஸ்ரீலங்காவின் அடக்குமுறைக்கு உலகமே ஒத்தூதியது ராஜதந்திர வெற்றி அல்ல என்கிறாரா? சும்மா மேலோட்டமாக சொல்லாமல் விளக்கமாக சொன்னால் குறைந்தா போய்விடும்?
chandran.raja
சிறு குழப்பமானநிலை ஏற்பட்டுவிட்டது என்னில். நன்றி அருட்செல்வன் மனோ.