இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு அரங்கில் இரவுப் போட்டியாக ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளும் இரண்டு 20க்கு 20 போட்டிகளில் மோதவுள்ளன. இரண்டாவது போட்டி எதிர்வரும் 4ம் திகதி நடைபெறும்.
இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதிய 2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரையும் அள்ளிச் சுருட்டியது. இலங்கை அணியிடம் டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்ற நியூசிலாந்து அணி 20க்கு 20 போட்டியில் வெற்றி பெறும் எண்ணத்தில் களத்தில் குதிக்கும் இப்போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணிக்கு பழி தீர்த்தாற் போல் ஆகிவிடும்.
இலங்கை அணிவீரர்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இப்போட்டியில் நிரூபிப்பார்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.