யாழ்ப் பாண மாநகர சபையின் மேயராக யோகேஸ்வரி பற்குணராஜாவை நியமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதாக முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். தென் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு நேற்று கொழும்பு, மகாவலி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். அங்கு அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக என். இளங்கோவை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பெயர் விபரங்கள் நேற்று தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர்களுக்கான பெயர்களை ஈ.பி.டி.பி. சிபார்சு செய்திருந்ததோடு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ{ம் பிரதி மேயர் பதவி தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தது.
எனினும், ஐ.ம.சு. முன்னணி கூடி இது குறித்து ஆராய்ந்து ஈ.பி.டி.பி. முன்வைத்த இருவரையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. யாழ். குடாவில் குறைந்தளவு முஸ்லிம்களே வசிக்கின்றனர். இத்தேர்தலில் புத்தளம் உட்பட ஏனைய பகுதிகளில் இருந்தே அதிகமான முஸ்லிம்கள் வாக்களித்தனர். இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் அதிக எண்ணிக்கையான முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் பிரதி மேயர் பதவியை அ.இ.மு.காங்கிரஸக்கு வழங்க அக்கட்சிக்கும் ஈ.பி.டி.பி.க்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
mano
எப்படியாயினும் முஸ்லிம் மக்கள் 80 வீதமும் வாக்களிக்க அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொண்ட 50 வீதமான தமிழ் மக்களில் 18 சதவீதமானோரே வாக்களித்தமையால் இந்த இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் சொற்பளவு முஸ்லிம் மக்களே உள்ள நிலை வரும்காலத்திலும் அவர்களில் மிகக் குறைந்தளவானோரே யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறும் விருப்பம் கொண்டவர்களாக உள்ளனர். பிரதி மேயர் பதவியைக் கோருகிறார்கள் என்பது விசித்திரமே.
ashokbharan
இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிர்வாகத்தில் இயங்கும் போது, யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மாத்திரம் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பது இம் மன்றங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுதலிப்பதாகும்.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எல்லா உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமலில்லை. ஒவ்வொரு தடவையும் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகியதும் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அம்முயற்சி கைவிடப்பட்டது.
முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பாராளுமன்ற உறுப்பினர்களே எதிர்ப்புத் தெரிவித்தவர்கள். தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்பது ஒவ்வொரு தடவையும் இவர்கள் கூறிய காரணம். ஆனால் பாராளுமன்றத் தேர்தல்களின் போது இக்காரணத்தை அவர்கள் கூறவில்லை. அத்தேர்தல்களில் போட்டியிடுவதற்காக முண்டியடித்து முன்வந்தார்கள். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்குக் காட்டிய எதிர்ப்பு அவர்களின் சொந்த நிலைப்பாடல்ல. புலிகளின் கருத்தையே அவர்கள் பிரதிபலித்தார்கள். புலிகளின் பேச்சாளர்களாகவே அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
இந்த எதிர்ப்பு மக்களின் நலனை நோக்கமாகக் கொண்டதல்ல, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுதலித்து அவர்களை அடிமைகளாக நடத்தும் புலிகளின் நோக்கத்துக்கு அமைவானது.இப்போது நிலைமை மாறிவிட்டது. கிழக்கு மாகாண மக்களைப் போல வடமாகாண மக்களும் புலிகளின் பிடியிலிரு ந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். புலிகளால் மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகளை இம்மக்கள் அனுபவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. இதற்கான ஆரம்பம் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலாக இருக்கட்டும்.
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்ற அதே நேரம் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது முரண்பாடான நிலைப்பாடாக உள்ளது. அரசியல் தீர்வு எவ்வளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மக்களின் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுவதும் அவசியம்.