லிபிய தலைநகர் திரிபோலியில் நடைபெறும் அந்நாட்டின் 40வது சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ரசா கிலானியை சந்தித்து உரையாடினார். அத்துடன் அந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வருகை தந்திருக்கும் பல வெளிநாட்டுத் தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்;.
பாகிஸ்தான் பிரதமருடன் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்குமிடையில் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கு இரு தரப்பு கலந்துரையாடல்களின் முக்கியத்துவம் குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.
அதனூடாக ஏற்படும் இராஜதந்திர உறவுகள் நாடுகளுக்கிடையில் வர்த்தக, பொருளாதார, சமூக உறவுகளை வலுப்படுத்துவதற்கு காரணமாக அமையுமெனவும் பாகிஸ்தான் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தகவல் மற்றும் தொடர்புசாதன தொழில்நுட்பப் பரிமாற்று வேலைத் திட்டமொன்று இரு நாடுகளுக்குமிடையில் செயற்படுத்துவதற்கும் இலங்கையில் செயற்படுத்தப்பட்டு வரும்
“ஈ அறிவகம்” திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு பாகிஸ்தான் அரசின் மூலம் தகவல் தொழில்நுட்ப வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் இச் சந்திப்பின்போது கவனம் செலுத்தினர்