பாகிஸ் தான் ராணுவத்தினரிடம் நூற்றுக்கும் அதிகமான தலிபான்கள் சரணடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின் ஆட்சியை இழந்த தலிபான்கள், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தஞ்சம் புகுந்தனர். பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் சுவாட் உள்ளிட்ட பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டதால் அமெரிக்கா, பாகிஸ்தானை எச்சரித்தது.
இதையடுத்து, கடந்த மே மாதம் முதல் தலிபான்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இந்த சண்டையில் 2,000 பேர் கொல்லப்பட்டனர். இந் நிலையில். சுவாட் பகுதியில் தலிபான்களின் ஆதிக்கத்தை பாகிஸ்தான் ராணுவம் ஒடுக்கியுள்ளது.105 தலிபான் பயங்கரவாதிகள், ராணுவத்திடம் நேற்று சரணடைந்தனர். சரணடைந்தவர்கள் தங்களிடமிருந்த நவீன ஆயுதங்களை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தங்களுக்கு தண்டனை கொடுப்பது குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என சரணடைந்த தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.