யாழ். மாவட்டத்திலுள்ள நீர்ப்பாசன திட்டங்களை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் செயற்படுத்துவதற்கென 138 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வழுக்கை ஆறு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் ஆற்றின் பிரதான வாய்க்கால் கட்டுமான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உப்பு நீரை வேறுபடுத்தும் நன்னீர் திட்டத்தின் கீழ் 11 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதற்கு 28.66 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. 3.4 மில்லியன் ரூபா செலவில் யாழ். குடாநாட்டிலுள்ள சிறிய குளங்களின் புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட வுள்ளன. என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.