இந்தோ னேஷியா ஜாவா தீவுப்பகுதியில் இன்று 7.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் போது இந்தோனேஷிய தலைநகரில் உள்ள குடியிருப்புகளின் சில கட்டிடங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கபப்டுகிறது.
எனினும் இதன் காரணமாக இலங்கைக்கு எதுவித ஆபத்தும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மற்றும் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.