மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து .கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றத் தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடொன்றுக்கு சென்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கொழும்புக்கு திரும்பும் போது பாக்கியசோதி சரவணமுத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், எதன் அடிப்படையில் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.