அமெரிக் காவில் கடந்த 8 மாதங்களில் 84 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. பொருளாதார தேக்க நிலையின் தாக்கம் அமெரிக்காவை கடுமையாகத் தாக்கியுள்ளது. மிகப் பெரிய வங்கிகளே ஆட்டம் கண்டு மூடப்பட்டுள்ள வேளையில் சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் மாதம்தோறும் மூடப்பட்டு வருகின்றன.
அஃபினிடி வங்கி, மெயின்ஸ்டிரீட் வங்கி, பிராட்ஃபோர்ட் வங்கி ஆகிய மூன்றும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன. இந்த ஆண்டில் கடந்த 8 மாதங்களில் 84 வங்கிகள் மூடப்பட்டன. இது கடந்த ஆண்டில் மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம். கடந்த ஆண்டு இதே காலத்தில் 25 வங்கிக் கிளைகளே மூடப்பட்டன.
ஜூன் வரையிலான காலாண்டில் போதிய நிதி வசதியின்றி அவதிப்படுவதாக 416 வங்கிகள் தெரிவித்துள்ளதாக வங்கிகளைக் காப்பீடு செய்துள்ள ஃபெடரல் வைப்பீட்டுக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பொருளாதார தேக்க நிலை மாறி மீட்சியடைந்து வருவதாக தகவல்கள் வெளியானபோதிலும், வேலையிழப்பு அதிகரித்துள்ளது. இதனால் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக சிறிய நிதி நிறுவனங்கள்ää சிறிய வங்கிகள் போதிய நிதி வசதியின்றி மூடப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் மிகவும் அதிகபட்சமாக 24 வங்கிகள் மூடப்பட்டுள்ளன.