பன்றிக் காய்ச்சலுக்கு ஆந்திராவில் இன்று இரண்டு பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் இந்த நோய் நேற்று வரை சுமார் 3 ஆயிரத்து 049 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 644 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 556, அர்ஜென்டினாவில் 465 பேர் உயிரை பறிகொடுத்துள்ளனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.