பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிதியத்திடமிருந்து 70.6 மில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான பிரேரனையை நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்திருந்தார். இத்திட்டத்தின்படி ஊவா பிரதேசத்தில் 200 கிலோ மீற்றர், கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 100 கிலோ மீற்றர் வீதியும் புனரமைக்கப்படவுள்ளது.
தெற்குப் பிரதேச பெருந்தெருக்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பின்னதுவ எனுமிடத்திலிருந்து கொடகம வரைக்கும் நான்கு வழிப் பாதை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. இத்திட்டத்தின்படி கொட்டாவை முதல் தொடங்கொட வரை 34.3 கிலோ மீற்றரும் தொடங்கொட முதல் குறுந்துகஹ ஹெதக்ம எனுமிடம் வரை 31.7 கிலோ மீற்றரும் சர்வதேச உதவியுடன் வீதி அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம் 2011ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும்.