கிழக்கிலும் வடமத்திய பிரதேசத்திலும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரனையை நிதி, திட்டமிடல் பதில் அமைச்சர் அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்திருந்தார். இத்திட்டத்தின்படி 70 மில்லியன் அமெரிக்க டொலர் ஆசிய அபிவிருத்தியிடமிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிதியின் மூலம் கிழக்கில் 150 கிலோ மீற்றர் தூரமான வீதியும் வடமத்திய பிரதேசத்தில் 220 கிலோ மீற்றர் தூரமான வீதியும் புனரமைக்கப்படவுள்ளது. இப்பிரதேசங்களை உள்ளடக்கிய பாலங்கள் மற்றும் மதகுகள் என்பவையும் மறுசீரமைக்கப்படவுள்ளன.