மட்டக் களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் பிரிவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரனையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார்.
100 கட்டில்களைக்கொண்ட புதிய வார்ட் தொகுதியொன்றும் 10 கட்டில்களைக் கொண்ட தீவிர கண்கானிப்புப் பிரிவொன்றும் இங்கு நிறுவப்படவுள்ளன. இதற்கான நிதி 10 கோடி ரூபா ஒருங்கிணைக்கப்பட்ட நிதியூடாகப் பெற்றுக்கொள்ளப்படும்.
ராகம போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை நிலையம் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட பிரிவுகளை அமைக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்காக 85 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டி பிரதான வைத்தியசாலையில் சிகிச்சைக்கான கட்டடம் ஒன்றை அமைக்கவும் 85 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.