கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் அம்பாறை பிராந்திய அலுவலகத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் திறந்து வைத்தார்.கிழக்கு மாகாண சபையில் இறைவரி தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்;டதையடுத்து மூன்று மாவட்டங்களிலும் இவ் அலுவலகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, துரையப்பா நவரட்ணராஜா மற்றும் இறைவரித் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த நாட்களாக அம்பாறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயததை மேற் கொண்டுள்ள முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். அவ் வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி அபிவிருத்தி மற்றும் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இச் சந்திப்பின் போது அவர் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆரர்யும் கூட்டமொன்றிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். இக் கூட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தலைவர்கள் ,உறுப்பினர்கள் ,அதிகாரிகள் மற்றும் மாகாண அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.