யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, இத்தாலியின் பிளாவியா பென்னட்டாவை எதிர் கொண்டார்.
இதில் தவறு மேல் தவறு செய்த சானியா முதல் செட்டை 0-6 என இழந்தார். இரண்டாவது செட்டையும் அவர் அதே செட்களில் பறி கொடுத்தார். இறுதியில் 0-6, 0-6 என ஒரு கேமை கூட கைப்பற்றாமல் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.