இந்தோனே ஷியாவின் ஜாவா தீவுப் பகுதியில் நேற்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஜாவா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் 700க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக இந்தோனேஷிய பேரிடர் மேலாண்மை மையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில் அந்நாட்டின் சியன்ஜூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் நிலச்சரிவால் மண்ணில் புதைந்ததாகவும், இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மாயமான 40க்கும் அதிகமானவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.