தெனியாய பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தெனியாய பகுதியில் வைத்து ஊடகவியலாளர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று காலை தமக்கு தகவல் கிடைத்தாகவும் அதுமுதல் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
john
ஜெயிலுக்குள்ளை கொண்டுபோய் வைத்திருக்கிறதையும் உரிய பாதுகாப்புதான் என்று கருதுகிறார்போலும்.
சாந்தன்
தனியார் காணிக்குள் ‘அத்துமீறி’ நுழைந்தனராம். அதனால் கைதாம். பாதுகாப்பாம். நானறிந்தவரை தனியார் காணிக்குள் நுளைந்தால் பொலிஸ் வந்து எச்சரிக்கை செய்து விட்டு, ஸ்ரேசனுக்கு வரச்ச்சொல்லிப் போவார்கள்.
உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் காணிகளை எடுத்தவர்கள் ”அனுமதித்த மீறலுக்குள்” வருகிறார்களா என்ன?