பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருமானால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 60 வீத தீர்வு கிட்டும். மக்கள் ஓரணி திரண்டால் இதற்குத் தம்மால் வழிகாட்ட முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஆனந்த சங்கரியுடன் தமக்கு எந்தவித கோபமுமில்லையெனத் தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைவான தீர்வொன்றைக் காண்பதற்கு ஒரு இணக்கப்பாட்டுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
13வது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென நம்பிக்கை தெரிவிக்கும் அமைச்சர் ஜனாதிபதியும் அதனை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். சமூக சேவை, சமூக நலன்புரி அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில்;
அரசியல் வரலாற்றினை நோக்கும்போது இலங்கை- இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் அரசாங்கங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஜனாதிபதி பிரேமதாசவிலிருந்து இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரை தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் புலிகள் இவை எதனையும் ஏற்கவில்லை.
திம்பு பேச்சுவார்த்தை கூட தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் வெளிக்கொணரும் ஒன்றாகவே அமைந்திருந்தது. எனினும் அன்று அதற்குத் தலைமை தாங்கிய தலைவர்களே இன்றில்லை.
இலங்கை- இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும். அதனைத் தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டுவிட்டனர். இந்த விடயத்தில் நான் இந்தியப் படையையோ இலங்கைப் படையினரையோ குறைகூறமாட்டேன். புலிகள் தாமும் அழிந்து தமது மக்களையும் அழியவிட்டுள்ளனர். புலிகளின் பிரச்சினை வேறு, தமிழ் மக்களின் பிரச்சினை வேறு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சாந்தன்
மக்கள் ஓரணிதிரண்டால் (உங்களுக்கு பின்னால்) நீங்கள் அப்பிடியே எல்லாம் ‘மஹிந்த சிந்தனைக்கு’ கிடைத்த வெற்றி எண்டு கவிட்டுப்போடுவியள்? சொந்த கட்சி ஆதரவாளர் கெஞ்சிக்கேட்டும் வீணையை விட்டு வெத்திலையில் நிண்ட நீங்கள் சொல்லுறியள்!
chandran.raja
வீணையும் வெற்றிலையும் யாணையும் பூணையும் புலியும் நாட்டுமக்களின் நலன் கருதியே தங்களின் சின்னமாக அடையாளப்படுத்திக் கொள்ளகிறார்கள். நாட்டுமக்களின் நலன் மேம்படவேண்டுமென்றால் தன் அடையாளத்தையும் விடதயாராக இருக்க வேண்டும். அவனே! மக்களின்-நாட்டின் தலைவன். இந்த சின்னவிஷயத்தையே புரிந்துகொள்ள முடியாத சாந்தன் எப்படி? உங்களைப் பொறுத்தரவரை மக்கள் எப்படிப்பட்டு போனால் என்ன? கல்லறை விரிந்துகொண்டு இருக்கவேண்டும். கல்லாப்பெட்டி நிறைந்து கொண்டிருக்க வேண்டும்.
BJM
ஆயுத கலாச்சாரத்தில் பழகிப் போனவர்களும் , திபாவளிக்கும், பொங்கலுக்கும் மாவீரர் தினத்தன்றும் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று நம்பியிருந்தவர்களுக்கும் திரோகிகள் என்ற வார்த்தையே திருக்குறளாகக் கேட்டவர்களுக்கும் ஜனநாயக வழிமுறைகளை பேசினாலே ஏற்க்க மறுக்கிறார்கள்.
எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, எந்தச் சின்னமாக இருந்தாலும் சரி, கட்சி விட்டு கட்சி மாறினாலும் சரி, மக்களுக்குத் தெரியும் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று. அவர்கள் முடிவு செய்வார்கள் யாரை தெரிவு செய்வது என்றும் யாரை நிராகரிப்பது என்றும்.
இது புலிக் காலமல்ல புத்தி ஜீவிகளின் காலம்.
மாயா
புலிகளும் புலி வாலுகளும் மாவீரர் நாட்களுக்காகத்தான் தவமிருந்தனரே தவிர , தமிழ் மக்களது விமோசன வாழ்வுக்காக அல்ல. எனவே நல்லவை புலிகளது காதுகளில் விழாது. சாவுகள் மட்டுமே கானமாக கேட்கும்.
palli
நல்ல விடயம் பாராட்டுகிறோம்; அதுக்கு எடுத்து காட்டாக தமிழ் அமைப்புகள் ஒன்றினைய வேண்டாம், மூத்த அரசியல்வாதி, தங்களை போல் புலி எதிர்பாளர் இப்படி பல ஒற்றுமை உள்ள நீங்கள் ஒருமைபடுவதை என்றாவது எண்ணியதுண்டா? அப்படி என்னாதான் உங்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்கல், மக்களுக்காக இந்த சின்னவிடயத்தில் கூட விட்டுகொடுக்க முடியாத நீங்கள் அரசுக்காக உங்கள் சின்னமான வீனையையே தூக்கி எறிந்த தங்களுக்கு பின்னால் ஓரணி திரளுங்கள் உருளுங்கள் என்பது எந்த விதத்தில் நியாயம் தோழர், ஆக நீங்கள்,, அரசுக்காக எதையும் விட்டு கொடுப்பியள் (தமிழரையும்). மக்களுக்காக எதையும் விட்டுகொடுக்க மாட்டீர்கள்( பதவிதான்)
chandran.raja
பதவியிருந்தபடியால் தமிழ்மக்களுக்கு இதையாவது செய்யக்கூடியதாக இருந்தது. இந்த பதவியும் சில அதிகாரங்களும் இல்லாதிருந்தால் யாழ்பாணமும் இன்னொரு வன்னியாகமாறி இருக்கும். பாடசாலைகளும் கோவில்களும் அகதிகள் முகாம்களாக மாறியிருக்கும் என்பதே என்அபிப்பிராயம். இல்லையேல் அமைதிப்படை என்ற பேரில் வெளிநாட்டுப்படையை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும் என்பது மற்றொரு எண்ணம்.
யாழ்பாணம் இந்தளவுவரை அமைதியைக் கண்டதென்றால் யாழ்மக்கள் தலைவனாக டக்ளஸ் தேவானந்தாவை பெற்றிருந்ததே! இவரை விட வேறுதலைவர்கள் வந்திருக்க மாட்டார்கள் என்றில்லை. எல்லா தலைவர்களையும் புலிகள் அழித்து டக்ஸசின் உயிரை எடுப்பதில் புலிகள் தோல்வி கண்டதே!
டக்கிஸசுக்கு இந்தபதவி கிடைக்காவிட்டால் யாழ்பாணமும் ஒருவன்னியாக மாறியிருக்கும். சிலவேளைகளில் அரசு தமிழ்பயங்கரவாதிகளை தோற்கடிக்க முடியாமல் போய்யிருக்கலாம். தோற்கடித்திருந்தால் யாழ்பாடசாலைகளும் கோவில்களும் அகதிமுகாகளாக மாறியிருக்கும். பதவியிருந்த படியால்தான் இவ்வளவற்றையும் செய்யக்கூடிய வாய்புஏற்பட்டது. எம்மவரில் பலருக்கு நடந்துமுடிந்த பின்தான் ஞானம் வருகிறது. பதவி இல்லையேல் கண்தெரியாத இடத்திலிருந்து இப்படி பின்னோட்டம் விட்டுகொண்டிருக்க வேண்டியது தான்.
பார்த்திபன்
//நல்லவை புலிகளது காதுகளில் விழாது. சாவுகள் மட்டுமே கானமாக கேட்கும்.- மாயா //
அட நீங்களொன்று பிணங்களை வைத்துத் தானே புலிகள் பணங்களைப் பார்த்தவர்கள். அப்ப எது அவங்களுக்கு முக்கியம்???
மேளம்
//மக்கள் ஓரணி திரண்டால் இதற்குத் தம்மால் வழிகாட்ட முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.// நல்லவிடயம்… வம்புதும்புக்கு போகாம இவர் தன்ர காரியாலயத்தில இருப்பார் … மக்களாக தங்களுக்குள்ள கதைச்சி ஒரு முடிவுக்குவந்து ஓரணியில திரண்டு இந்தாளுட்ட போனா… அவர் எல்லாரையும் கூட்டிப்போய் வழிகாட்டி…. அப்பிடியே எல்லாரையும் வெத்திலையில ஒட்டிடுவாரு…. இவரவிட தனியே ஒத்தமனிசனா போய் வெத்திலையில ஒட்டித்து இப்ப மக்கள அணிதிரட்டுறன் என்று ஓடுப்பட்டுதிரியிற கருணா (முரளிதரன்) எவ்வளவோ பரவாயில்லை போலகிடக்கு. சொந்த வீணையையே வாசிக்க முடியல்ல….. ஆலையில்லா ஊருக்கு இலுப்பப் பூ சக்ரை.
மேளம்
palli
//கண்தெரியாத இடத்திலிருந்து இப்படி பின்னோட்டம் விட்டுகொண்டிருக்க வேண்டியது தான்.//
உன்மதான் ;
ஆனால் பிணத்தை கணக்கு பார்ப்பதை விட எமது பின்னோட்டம் பரவாயில்லைதானே; அத்துடன் பல்லி இருட்டில் இல்லை; உங்கள் கண்களுக்கு தெரியாதவை எல்லாம் இருட்டா?
chandran.raja
கண்தெரியாத இடத்தில்லிருந்தது…. பின்னோட்டம் விடுவது பல்லிக்கு மட்டுமில்லை அது சந்திரன்.ராஜாவுக்கும் பொருந்தும்.பதவி அதிகாரம் கட்சி அமைப்பு அதன் முக்கியத்துவத்தை குறிப்பதற்காக சொல்லப்பட்டது.