இராக் மற்றும் சிரியாவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக டைக்ரிஸ் மற்றும் யுப்பிரிட்டிஸ் நதிகளில் கூடுதல் தண்ணீர் விடும்படி இந்த நாடுகள் விடுத்த கோரிக்கையை துருக்கி நிராகரித்திருக்கிறது.
துருக்கியும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் இந்த நதிகளின் நீர்ப்பாசனப்பகுதியில் இருக்கும் தனது அண்டை நாடுகளின் வேண்டுகோளின்படி கூடுதலாக விடுவதற்கு மேலதிக தண்ணீர் தம்மிடம் இல்லை என்றும் துருக்கி தெரிவித்துள்ளது.
கூடுதல் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பில் துருக்கி முன்பு கொடுத்த வாக்குறுதியை மதித்து நடக்கவில்லை என்று இராக் புகார் தெரிவித்துள்ளது.
ஆனால் சட்டரீதியாக தான் திறந்துவிடவேண்டிய அளவை விட கூடுதல் தண்ணீரை ஏற்கனவே திறந்து விட்டுவிட்டதாக துருக்கி பதிலளித்துள்ளது.
chandran.raja
துருக்கியின் பிரமாண்டமான நீரணையில்லிருந்து நீர்பெற்றுவரும் நாடுகளில் இஸ்ரவேலும் ஒன்று. இருபது வருடங்களுக்கு முன்பு முரண்பாடுகள் வந்த போதும் ஒரு போதும் நீர்ரை ஆயுதமாக பாவிக்கமாட்டோம் என துருக்கிய அமைச்சர் கூறியிருந்தார். உலகரீதியில் பிரச்சனைகள் புதுபுது வடிவம் எடுக்கும் போது எண்ணைவகைகள் மட்டமல்ல நீரும் ஆயுதவடிவமாகலாம். இதில்லிருந்து மீள்வதற்கு வழிதேடுவதே! இன்று மனிதகுலத்தை அச்சுறுத்துகிற கேள்வி.
முதாளித்தவம் தனது இறுதி நிலையான மந்தநிலையை அடையும்போது பரந்த யுத்தத்தின் மூலமே தீர்வைத்தேடுகிறது என்ற மாக்ஸின் ஆய்வை யாரும் அசட்டை செய்துவிட முடியாது.