ஏ9 பாதையூடாகப் போக்குவரத்து செய்வதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் லொறிகளுக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து செய்வதற்கு 854 லொறிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட போதிலும் அவற்றில் போக்குவரத்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
ஜூன் மாதம் ஏ9 வீதி திறக்கப்பட்ட தன் பின்னர் இதுவரை குறித்த லொறிகள் எவ்வித போக்குவரத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு தடவை போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு லொறி உரிமையாளர்கள், ஒரு லட்சம் ரூபாவை கட்டணமாகக் கோருகின்றனர் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். எனவே, எவரும் இந்த லொறிகளை வாடகைக்கு அமர்த்த முன்வருவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.