மட்டக் களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் 12 பேர் இறந்துள்ளனர். 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தொற்று நோய்த் தடுப்பு நிபுணர் டாக்டர் தட்சணாமூர்த்தி தெரிவித்தார். எனினும் தற்போது இம்மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுதல் பூரணக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் எதிர்வரும் மாதம் பருவமழை ஆரம்பமாகியதும் மீண்டும் டெங்கு நோய் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
டெங்கு நோயை ஒழிக்கும் நோக்கில் தற்போது புகை அடித்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே அதிகமானோர் டெங்கு நோயினால் மரணமாகியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.