35 கிராமங்களில் 30,000 பேர் மீள்குடியமர்வு : வட மாகாண ஆளுநர் தகவல்

north-governor.jpgஇடம் பெயர் மக்களில் 30,000 பேரை 35 கிராமங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி. ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

‘வடக்கில் வசந்தம்’ திட்டப் பணிப்பாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ விடுத்த பணிப்பின் பேரில் 7795 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு 35 கிராமங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கென மங்குளம், நொச்சிமொட்டை, சலம்பைக்குளம், பம்பைமடு ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட்ட ஆளுநர், குடியேற்றப்படும் மக்களின் தேவைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கூடி ஆராய்ந்துள்ளார்.

இதனிடையே, மேற்படிக் கிராமங்களைத் துப்புரவு செய்து, நீர், மின் விநியோகங்களை ஏற்படுத்தவும் வீதிகளைத் திருத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையை அடுத்து கடந்த 20 வருடங்களாக இக்கிராமங்களில் வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

மீள்குடியேற்றத் திட்டம் இன்னும் சில வாரங்களில் பூர்த்தியடைந்து விடும் எனக் கூறிய ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி, இதற்காகத் தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அதிகாரிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *