வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்வதற்குப் பல தனியார் நிறுவனங்களுக்கு முதலீட்டு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், ரூபா 9 பில்லியன் நிதியை குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்யவுள்ளதாகவும் அரச முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.
கால்நடை அபிவிருத்தி, பழம் மற்றும் மரக்கறிச் செய்கை, அரிசி ஆலைகள், மீன் பதனிடுவதற்கான ஐஸ் உற்பத்தி, பால் உற்பத்தி, விவசாயப் பண்ணை, சிமெந்து, ஹோட்டல்கள், கப்பல் திருத்த வேலைகள், ஆடை உற்பத்தி, ஜெனரேட்டர்கள் உற்பத்தி போன்ற துறைகள் இத்திட்டங்களில் குறிப்பிடத்தக்கவை.
இவற்றில் சில திட்டங்களை அமுல்படுத்துவதற்குப் பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியாக, மலேசியா, சுவிற்சர்லாந்து, இந்தியா, ஜப்பான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் உதவ முன் வந்துள்ளதாகவும் முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.