கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயம டைந்திருந்த ஒருவர் நேற்று முன்தினம் வியாழன் இரவு பேராதனை வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். இதன் மூலம் இவ்விபத்தில் கொல்ல ப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இச்சம்பவம் நடந்தது.
தற்போது மரணமடைந்துள்ளவர் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பதில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எஸ். எச். ஏ. அமஸ் (வயது 54) என்பவராவார்.
சாய்ந்தமருதுவைச் சேர்ந்த இவர் இலங்கை அதிபர் சேவை முதலாம் தரத்தைச் சேர்ந்தவர். கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸ¤ம், கொழும்பில் இருந்து பிபிலை நோக்கிச் சென்ற இ.போ.ச பஸ் ஒன்றும் நேருக்குநேர் கண்டி, பேராதனை யில் கடந்த செவ்வாய் இரவு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் வாகனச் சாரதி ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தமை குறிப் பிடத்தக்கது. இவ்விபத்தில் ஒருவரின் வலது கை துண்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.