கிழக்கு ஆயுத குழுக்களுக்கு மேலுமொரு பொது மன்னிப்பு காலம்

கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு மேலுமொரு பொது மன்னிப்புக் காலம் வழங்கப்படவுள்ளது.  அவர்களிடமுள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க மற்றுமொரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்த முடியுமென கிழக்குப் பிராந்திய பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக தெரிவித்தார்.

புதிய பொது மன்னிப்புகால அவகாசத் திகதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தம்மிடமுள்ள ஆயுதங்களை பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்த காலக்கெடு கடந்த மூன்று வாரங்களுக்கு பின்னர் முடிவடைந்தது. இக்காலப் பகுதிக்குள் சொற்ப தொகையான ஆயுதங்களே ஒப்படைக்கப்பட்டன. எமது கோரிக்கை ஆயுதக் குழுக்களினால் நிராகரிக்கப்பட்டதாகவே கருதுவதாகவும் எடிசன் குணதிலக கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் பிரதேச ரீதியில் இயங்கிவரும் ஆயுதக் குழுக்களிடம் பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்கள் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் எமக்குத் தெரியவந்துள்ளது. எனவே மீண்டும் வழங்கப்படுகின்ற மன்னிப்புக் காலத்தை இறுதிச் சந்தர்ப்பமாக முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென எடிசன் குணதிலக கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Appu hammy
    Appu hammy

    இந்த பேரினவாத அரசு கிழக்கில் இனப்படுகொலை நடத்தவில்லையா!, இனப்பகையை கட்டவிழ்த்து விடவில்லையா. பேரினவாத சிங்களக் படைகள் பாலியல் பலாத்காரங்கள் முதல் தமிழன் என்ற காரணத்தினால் இனப் படுகொலையை செய்யவில்லையா? இதை இலங்கையின் எந்த நீதிமன்றம் விசாரணை செய்துள்ளது. புலிகளின் குற்றங்களைப் பற்றி மட்டும் பேசுவதும், படைகளின் குற்றங்களை மூடிமறைத்து பாதுகாப்பதிலும், பாசிச அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது. இந்த நிழலின் கீழ் தான், நீதிமன்றங்கள் இயங்குகின்றன. போர்க்குற்றத்திலும், இனவழிப்பு குற்றத்திலும்; ஈடுபட்டவர்கள் அரசாகவும், சட்டத்தின் காவலராக இருந்து தமிழனுக்கு எதிராகவும் பாய்கின்றனர். இதன் மூலம் இலங்கை முழுவதிலும் வாழும் அனைத்து இன மக்கள் மேலும் பாசிசத்தின் ஆட்சியைத் திணித்து வருகின்றனர்.

    Reply
  • palli
    palli

    என்ன கொடுமை இது, ஆயுதம் ஏந்தி அதனால் பலரை விஸா இன்றி மேலோகத்துக்கு அனுப்பிய பலருக்கு (கிழக்கு)பொது மன்னிப்பு; அது
    போதாதென மீண்டும் ஒரு குடும்பசலுகை மன்னிப்பு; (தவறென பல்லி சொல்லவில்லை)

    ஆனால்; பேனா பிடித்தவனுக்கு ஆயுள் தண்டனை, அதுவும் கடும் காவல்சிறை, இதைதான் பல்லியின் பாஸையில் குலவிளக்கு குத்தாட்டம் போடுகுதென;

    Reply