அடுத்த இருபது வருட காலத்தில் ஏனைய நோய்களை விட உலகில் அதிகம் பேரை பாதிக்கும் நோயாக மன உளைச்சல் நோய் உருவெடுக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் கணித்துள்ளது.
ஏனைய உடல் நலப் பிரச்சினைகளைவிட மன உளைச்சல் என்பது சமுதாயத்தின் மீது பெரிய சுமையாக இருக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.
2030ஆம் ஆண்டு அளவில் உலக சமுதாயத்தில் மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாக மன உளைச்சல் உருவெடுக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளி விபரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
இருதய நோய் எய்ட்ஸ் போன்ற நோய்களைக் காட்டிலும் அதிக உயிரிழப்புகளையும் அதிக உடற் திறன் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் நோயாக மன உளைச்சல் உருவெடுக்கும் என்று தெரிகிறது.