கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக சர்வதேச நாணய நிதியம் சிம்பாவேவுக்கு கடன் வழங்கவுள்ளது.
சிம்பாப்வே தனது வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் மிகக் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுவரும் நிலையில் அதனை ஈடுகட்டும் நோக்கில் அந்நாட்டுக்கு 50 கோடி டாலர்கள் வழங்கப்படவுள்ளதாக பிபிசி அறிந்துள்ளது.
இந்தப் பணம் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டுமே ஒழிய வேறு திட்டங்களில் செலவழிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் சர்வதேச நாணய நிதியம் கடன் தொகையை வழங்கபோவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
சிம்பாப்வேயின் பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டின் மத்திய வங்கியில் நடந்த மோசமான நிதி நிர்வாகமும் ஒரு காரணம் என்று எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.