யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றுவதற்காக 500 தமிழ் இளைஞர்களைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்குப் பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் யாழ்.மாவட்டத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நல்லுறவை மேம்படுத்துவதற்கும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளைத் தமிழில் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு விருப்பமுள்ளவர்களிடமிருந்து அடுத்த வாரம் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்தவர்களிற்கான நேர்முகப் பரீட்சையை நடாத்துவதற்குப் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்திற்குச் செல்லவுள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம் யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தப்படும். மேலும் சிவில் பாதுகாப்பு விடயங்களைத் தீவிரப்படுத்தவும் முடியும் என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்