அமெரிக் காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார்.
சற்று முன்னர் நடந்து முடிந்த இப்போட்டியில் ஜெர்மனியின் நிக்கோலஸ் கெய்ஃபர் உடன் மோதிய நடால் முதல் செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அசத்தினார். ஆனால் அடுத்த செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி நடாலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் நிக்கோலஸ்.
எனினும், 3வது செட்டில் மீண்டும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அதனைக் கைப்பற்றி நிக்கோலஸ்க்கு பதிலடி கொடுத்தார். தொடர்ந்து 4வது செட்டிலும் நடால் கையே ஓங்கியிருந்தது. முடிவில் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அதனைக் கைப்பற்றி, 3-1 என்ற செட்க்கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.