பயங்கர வாத தடைச்சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் தண்டிக்கப்படக் கூடாது. நாட்டின் சாதாரண சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் மட்டும் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென அது தெரிவித்துள்ளது.
1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஊடகவியலாளர் திஸ்ஸாநாயகம் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் ஊடகவியலாளர் தொடர்பான வழக்குகளுக்குச் சாதாரண சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.