ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினிக்கு, சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
நளினி தனக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், “எனக்கு 1992 முதல் 98 வரை சிறையில் முதல் வகுப்பு வழங்கப்பட்டிருந்தது. பின்னர் விலக்கி கொள்ளப்பட்டது. நான் எம்.ஏ., எம்.சி.ஏ. படித்துள்ளேன். எனது படிப்பின் அடிப்படையில் எனக்கு சிறையில் முதல் வகுப்பு தர உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, தடா வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “நளினிக்கு சிறையில் முதல் வகுப்பு தர வேண்டும்’ என்று வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்