தபால் மூலம் வாக்களிக்க 38,602 பேர் தகுதி

southern_province2.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 38,602 வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவிக்கின்றது.

காலி மாவட்டத்திலிருந்து 17,642 விண்ணப்பங்களும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 11,600 விண்ணப்பங்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 9360 விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.தென் மாகாண சபைத் தேர்தலுக்காக தபாலில் வாக்களிக்க தகுதி பெற்றோரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித் தினம் கடந்த 28 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ள நிலையில் அத்தினத்துக்கு முன்னர் கிடைத்த விண்ணப்பங்களில் தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *