இந்திய – இலங்கைக்கு இடையில் கடலுக்கடியிலான மின்சார பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்த மாதத்திற்குள் கைச்சாத்திடப்படுமென மின்சக்தி எரி சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம் தென்னிந்தியாவில் இருந்து தலைமன்னார் வரையான கடலுக்கடியிலான மின்சார பரிமாற்றப் பணிகளுக்கான ஆயத்தங்கள் தயாரகவிருப்பதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளுக்கு யுஎஸ் எயிட் நிறுவனம் ஒத்துழைப்பினை வழங்கவுள்ளது.