இலங்கையில் வருடா வருடம் மரணமடைவோரின் 71 சதவீதமானோர் தொற்றா நோய்களால் உயிரிழப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு நடத்திய ஆய்விலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழப்போரின் 35 சதவீதமானோர் இருதய நோய்களாலும், 20 சதவீதமானோர் நீரிழிவு நோயை அடிப்படையாகக் கொண்ட பாதிப்புகளாலும், 6 சதவீதமானோர் சிறுநீரக நோய்களாலும் மரணமடைவதும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.
இதேநேரம் கொழும்பு மாநகரிலுள்ள நாலாம், ஐந்தாம் வகுப்புகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்/ மாணவியர் மத்தியில் நடத்திய ஆய்வின்படி 14 சதவீதமானோர் உடல் பருமன் அதிகரிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இப்படியானவர்கள் இளம் வயதில் நீரிழிவு நோய்க்கும், அது தொடர்பான பாதிப்புகளுக்கும் உள்ளாவதும் தெரிய வந்திருக்கின்றது.