ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த மாத இறுதியில் முன்வைக்கப்படும் எனவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நீடிப்பு குறித்து இறுதித் தீர்மானம் வழங்கப்படும் என்றும் சிங்களப் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆடைக் கைத்தொழில்துறைக்கு பெரும் உதவியாக அமையப் பெற்றுள்ள ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை நீட்டிப்பது குறித்த இறுதித் தீர்மானம் மாத இறுதியில் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.
ஊடக சுதந்திரம், நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் போன்ற துறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்திய பின்னரே இந்த சலுகைத் திட்டம் நீடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இலங்கையின் கடந்த கால மனித உரிமை நிலவரம், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக ஆட்சி முறைமை குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பிலான இறுதித் தீர்மானம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஏற்கனவே அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு எதிர்வரும் 17ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.