நாட்டில் தற்போது காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளதால் கிழக்கு, தென் கிழக்கு, மற்றும் மன்னார் குடா கடற்பரப்புக்களில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்படவேண்டுமென வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன கடற்பரப்பில் உருவாகியுள்ள சுறாவளி காரணமாகவே இலங்கையில் காற்றின் வேகம் அதிகரித்திருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்த டி சில்வா தெரிவித்தார். இந்த நாட்களில் இலங்கைக்கு தென்மேற்காக காற்று வீசுகின்றது. மணித்தியாலயத்திற்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்ற காற்றின் வேகம் சில சமயம் 60 – 70 கிலோ மீட்டர் வரையும் அதிகரிக்கக் கூடும்;.
அதனால் கிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் குடாவில் மீன்பிடிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த நிலைமை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்க முடியும் என மேலும் தெரிவித்தார்